8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை!
சென்னை:
முகப்பேரை சேர்ந்த சதிஷ் குமார் மற்றும் ஶ்ரீ பத்மஜா தம்பதியின் இளைய மகள் தான் தான்விதா மாலினி இவர் தனது மாஸ்டர் ரத்ன சபாபதி அவர்கள் மூலம் வில்வித்தை பயிற்சியை மிகுந்த ஆர்வத்துடன் கற்று கொண்டு தனது விடா முயற்சியால் வண்டலூரில் உள்ள TNPES பல்கலைகழகத்தில் 8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
1)
திரு. சி. ராஜா குமார்
செயலாளர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்.
2)
திருமதி. மேகலா, டிபிஎஸ்.
துணை போலீஸ் சூப்பிரண்டு.
தமிழ்நாடு போலீஸ் அகாடமி.
3)
திருமதி. எம். ரேவதி பி.ஏ.,பி.எல்.,
உதவி அரசு வழக்கறிஞர்.
தமிழ்நாடு போலீஸ் அகாடமி
4)
டாக்டர் எஸ் ஆறுமுகம்
இயக்குனர் மற்றும் தலைவர், உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை.
மனோன்மணியம் சுந்தரம் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
நடுவர்- WYABR
5)
திரு. கிரி துவாரகிஷ்
இந்திய திரைப்பட நடிகர்.
6)
டாக்டர். வி துரைசாமி
இணைப் பேராசிரியர், HOD I/C, யோகா துறை, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்.
7)
திரு. கே ரத்ன சபாபதி
பொதுச்செயலர்,
தமிழ்நாடு இளைஞர்கள் கள வில்வித்தை சங்கம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மாணவியின் பெற்றோர்கள் கூறுகையில்:
என் மகள் தன்விதா மாலினி வேலம்மாள் பள்ளி மேல் அய்யனம்பாக்கம் கிளையில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். என் மகளுக்கு 8 வயது, அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ஜுனா வில்வித்தை அகாடமியில் வில்வித்தை விளையாட்டை பயின்று வருகிறாள். இன்று (07/05/2023) 8 நிமிடங்களில் 80 அம்புகளை 8 மீட்டர் தொலைவில் Stance Stable நிலையில் நின்று அம்பு எறிந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, இந்த உலக சாதனைக்கு தயாரானார். மதிப்பிற்குரிய பயிற்சியாளர் திரு. கே. ரத்னா சபாபதி மற்றும் உலக இளம் சாதனையாளர் புத்தகக் குழு மற்றும் இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. பெற்றோர்களாகிய நாங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளோம், எங்கள் மகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்.இறைவனுக்கு மிக்க நன்றி என்று தெரிவித்தனர்.
மாணவி தான்விதா மாலினி கூறுகையில்:
முதலில் என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நன்றி சொல்லுகிறேன், அவர்கள் ஊக்குவிக்கவில்லை என்றால் என்னால் இந்த முயற்சியை செய்திருக்க முடியாது, பிறகு ரத்ன சபாபதி மாஸ்டர் எனக்கு பொறுமையுடன் இந்த வில் வித்தையை சொல்லி கொடுத்தார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி என்று கூறிய மாணவி எனது வருங்கால ஆசை I.A.S ஆவது தான் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில் மாணவி தான்விதா மாலினிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கருத்துரையிடுக