ரோமியோ: திரைவிமர்சனம்
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மிர்னாலினி ரவி, ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தான் "ரோமியோ"
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
குடும்பத்தின் கடன் சுமை காரணமாக மலேசியாவில் பணி புரிகிறார் விஜய் ஆண்டனி இவர் பெயர் படத்தில் அறிவு. விஜய் ஆண்டனி திருமணம் செய்யாமலேயே இருந்து இந்தியா வருகிறார். சென்னையில், சினிமாவில் கதாநாயகியாகும் கனவோடு வாழ்ந்து வருபவர் லீலா. பெற்றோர்களிடம் ஐ.டி.யில் வேலை செய்வதாகக் கூறி சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். லீலா வின் மூன்று நண்பர்களும் கதையை வைத்து சினிமாவில் சாதிக்க துடிக்கின்றனர்.
காதல் வந்த பிறகு தான் திருமணம் செய்வேன் என்று விஜய் ஆண்டனி இருக்கிறார். ஒரு துக்க வீட்டில் லீலாவைப் பார்க்கிறார் விஜய் ஆண்டனி. பிறகு பெரியோர்கள் மூலம் நிச்சயிக்கப்பட்டு விருப்பமின்றி லீலாவின் திருமணம் நடக்கிறது. இதனால் தன் கதாநாயகி கனவு பொய் விட்டதே என மன உளைச்சலிலேயே இருக்கிறார் லீலா.
பிறகு தன் மனைவியை விஜய் ஆண்டனி எப்படி தன் அன்பின் மூலம் திருப்பினார்? லீலாவின் கதாநாயகி கனவு நிறைவேறியதா? எனபதே மீதி கதை......
யோகி பாபு விஜய் ஆண்டனி மனைவி லீலா வின் அன்பை பெறுவது பற்றி ஆலோசகராக நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி தங்கை காட்சி சிறிது சோகத்தை ஏற்படுத்துகிறது. பரத் தனசேகரின் இசை ஓகே. ”அடிச்சா அவன் ஆம்பளையா” என்ற வசனம் தேவையா? என்று சிந்திக்க வைத்து விட்டது. ஏனென்றால் தொடர்ந்து பழைய கதைகளில் பார்த்து வருகிறோம்.
தங்கை நெருப்பு காட்சியிலும் வசனத்திலும் கூடுதல் கவனம் தேவை.....
மொத்தத்தில் இந்த 'ரோமியோ' சினிமாவுக்குள் சினிமா.....
RATING: 2.8/5
கருத்துரையிடுக