ஜனவரி 2026

'ஜனநாயகன்' இழுபறி நியாயம் இல்லை: கே. ராஜன் பேச்சு!



சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து 'ப்ராமிஸ்' என்றொரு படம் உருவாகி இருக்கிறது.

இப்படத்தில்  கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். நாயகியாக நதியா நடித்துள்ளார்.

சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார்.

இந்த 'ப்ராமிஸ்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவுக்குப் படக் குழுவினர் அனைவரும்  தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள். அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள தயாரிப்பாளர் N.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது,

"இந்த இயக்குநரை 2023இல் வேலூரில் சந்தித்தேன். அவர் ஒரு  கதையைச் சொன்னார். நீங்கள் தான் தயாரிப்பாளர் என்றார். எனக்கு உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. யோசித்துச் சொல்கிறேன் என்றேன். ஆறு மாதம் போனது. இதை என் மனைவியிடம் கூறிய போது செய்யலாம் என்றார். 2024ஆகஸ்ட் 15 இல் படம் பூஜை போடப்பட்டது. அப்படியே படக்குழு உருவாகி இந்தப் படத்தை முடித்து விட்டோம். இயக்குநர் நல்ல திறமைசாலி, உழைப்பாளி . அவரைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் படத்தில் வசனங்கள், பாடல்கள் எல்லாம் முடிந்தவரை  தமிழில் இருக்க வேண்டும் நினைத்தோம். வேறு வழியில்லாமல்தான் தலைப்பை ’ப்ராமிஸ்’ என ஆங்கிலத்தில் வைத்தோம். இப்போது படம் முடிந்து வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறது. மக்களை நோக்கித் தேர்வு எழுதுவது போல் ஒரு மன நிலையில் இருக்கிறோம். இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். முடிவு மக்கள் கையில் இருக்கிறது. இந்தப் படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்தார்கள், ஒத்துழைப்பு கொடுத்தார்கள் .அதை மறக்க முடியாது .தங்கள் சொந்தப் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். அனைவருக்கும் நன்றி'' என்றார்.

பாடலாசிரியர் பாலா பேசும்போது,

"இப்போது வருகிற படங்களில்  நல்ல பாட்டு இல்லை என்கிற குறை , வருத்தம் இருக்கிறது. உண்மை என்னவென்றால் அதற்கான நல்ல பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான களங்கள் குறைந்து வருகின்றன. நல்ல வாய்ப்பு கொடுத்தால் நல்ல பாடல்கள் வரும். திரைப்படங்களில் பாடல்களை ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்கிற போக்கு இருக்கிறது.பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர் அல்ல, அவை படங்களுக்கு மைலேஜ் என்றுதான் சொல்ல வேண்டும்.

'குணா' படத்தின் பாடல் காலம் கடந்தும் ரசிக்கப்படுகிறது.அது ஓர் அடையாளமாக இருக்கிறது 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற பாடல் ஓர் அடையாளமாக மாறி இருக்கிறது.இப்படிப் பாடல் ஒரு படத்தைக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும்.இந்தப் படத்தில் பாடல் எழுதியது நல்ல அனுபவம்'' என்றார்.

எடிட்டர் ஸ்ரீராம் விக்னேஷ் பேசும் போது,

"இந்தப் படத்தின் ட்ரெய்லரில் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் ஒரு விஷயத்தை மறைத்து இருக்கிறோம். படத்தில் உள்ளதெல்லாம் ட்ரெய்லரில் வரவில்லை.படம் பார்க்கும்போது அது தெரியும்" என்றார்.

இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது,

"எங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை,இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரங்களோ பிரமாதமான பட்ஜெட்டோ கிடையாது .எங்களைத் தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லை. அப்படி இருக்கும்போது இங்கே பேரரசு, கே ராஜன் போன்றவர்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்குச் சினிமா மிகவும் பிடிக்கும்.நன்றாக இருந்தால் சினிமாவைக்  கொண்டாடுவார்கள். நன்றாக இல்லை என்றால்  விமர்சனமும் பலமாக செய்வார்கள். நான் ஊடகத்தில்  2015 - லிருந்து 21 வரை வேலை பார்த்தேன். பிறகு ஒரு பைலட் பிலிம் எடுத்தேன். நண்பர்கள் ஆதரவாக இருந்தனர். 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' என்ற அந்த ஒரு மணி நேரப் படத்தை எடுத்து எங்கள் பகுதியில் எல்இடியில் திரையிட்டேன் .அதிலிருந்து நகர்ந்து  இந்தப் படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்து இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன். 

வாய்ப்பு கேட்டு எங்கே போனாலும் அனுபவம் வேண்டும், அனுபவம் வேண்டும் என்று கேட்டார்கள்.அந்த நிலையில் இவர் என்னை நம்பினார்.அதுமட்டுமல்ல இந்தப்படம் உருவாகும் போது

என்னை ஒவ்வொரு கட்டத்திலும் கைப்பிடித்து அழைத்துச் சென்ற இந்தத் தயாரிப்பாளரை மறக்க முடியாது. இந்தப் படத்துக்கு உயிரோட்டமாக சரவண தீபனின் இசை இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாதிக்குத்தான் ட்ரெய்லர் வெளியிட்டுள்ளோம்.சுவாரஸ்யம் போய்விடும் என்று இரண்டாம் பாதியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அது தெரியும்.

 இதை விளம்பரப்படுத்துவதற்கு ஹெச். வினோத் சாரின் உதவியைக் கேட்டோம் .உதவுவதாகச் சொன்னார். அவருக்கு நன்றி.ஆனால் அவரோ ’ஜனநாயகன் ’ பிரச்சினையில் இருக்கும் போது நாங்கள் எப்படிக் கேட்பது?அதனால் அவரை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் சேரன் சார், மற்றும் நட்டி சாருக்கு நன்றி. 

நாங்கள் அதிக ஆட்கள் இல்லாமல் 12 பேர் மட்டும் கொண்ட குழுவாக இருந்து பல வேலைகளையும் செய்தோம்.இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் படம் நிறுத்தப்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்தது. அந்த கஷ்டமான காலத்தில் அப்போது கதாநாயகி நதியா கைகொடுத்து உதவினார் .அதை மறக்க முடியாது. இப்படிப் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி'' என்றார்

இசையமைப்பாளர் சரவண தீபன் பேசும்போது,

"இது எனக்கு முதல் படம் முடிந்தவரை செய்திருக்கிறேன். அனைவரும் ஆதரவு தர வேண்டும்'' என்றார்.

நடிகர் காதல் சுகுமார் பேசும்போது ,

”நான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைப்பற்றி  இங்கே குறிப்பிட்ட போது ,

 எனக்கே திடுக்கென்று இருந்தது .சினிமாவில் நான் சாதிக்கவில்லை என்றாலும் சினிமாவில் இவ்வளவு நாள் இருப்பதே ஒரு சாதனைதான் .இந்த படக்குழுவினரை வாழ்த்துகிறேன் " என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

"சத்தியம் என்ற வார்த்தைக்கு ஒரு மதிப்பு உள்ளது. ஒரு காலத்தில் சத்தியம் செய்து விட்டால் அதைப் பெரிதாக நினைப்பார்கள். அது இப்போது மாறி வருகிறது .சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை.அவர்களைப் பார்த்து அப்போது சொல்வார்கள் ’சத்தியம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல்’ என்பார்கள்.

நான் படிக்கும்போது புத்தகத்தின் மீது சத்தியம் பண்ணச் சொல்வார்கள் .தவறாகச் சத்தியம் செய்தால் படிப்பு வராது என்று பயந்தார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் குழந்தை மீது சத்தியம் பண்ணச் செல்வார்கள்.இன்று சத்தியத்துக்கு யாரும் பயப்படுவதில்லை .அதனால் தான் இந்த இந்த நாட்டில் இவ்வளவு வன்முறைகள், அநியாயங்கள் நடக்கின்றன. நாடு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் இயக்குநர்தான் கதாநாயகன். ஆனால் இங்கே கதாநாயகி வரவில்லை.

இங்கே ஒரு படம் ஆரம்பிக்கும் போதே கதாநாயகன் ,கதாநாயகியிடம் பட விழாக்களுக்கு வருவேன் என்று  படத்தின் மீது சத்தியம் வாங்க வேண்டும்.

நீண்ட நாள் கழித்துதான் இப்படிப் பார்க்கிறோம் இங்கே திரையிடப்பட்ட மூன்று பாடல்களுமே ஈர்ப்பாக உள்ளன. பாடல்களும் சரி, வரிகளும் சரி நன்றாக உள்ளன.சில இசை கொண்டாட வைக்கும் ; சில இசை இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் .அப்படி இதயத்திற்குப் பாலமாக இருக்கும் படி இந்தப் பாடல்களும் இசையும் இருந்தது. இசையமைப்பாளர், பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

ட்ரெய்லர் பார்க்கும்போது கதை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.இந்தப் படத்தில் கதாநாயகன் கதாநாயகி தலையில் அடிக்கடி அடித்துச் சத்தியம் செய்வதைப் பார்க்கும் போது ஏதோ கதையில் இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.அதிக சத்தியம் செய்பவன் ஆபத்தானவன். படத்தில் செய்யும் சத்தியங்களைப் பார்க்கும்போது கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

’முந்தானை முடிச்சு’ படத்தில் பாக்யராஜ் மீது ஊர்வசி ஒரு பழி செல்லும்போது குழந்தையைத் தாண்டச் சொல்வார் .ஊர்வசியும் பொய் சத்தியம் செய்து தாண்டி விடுவார், அதற்குப் பிறகுதான் படத்தின் கதையே ஆரம்பிக்கும். அது போல் இதிலும்  சத்தியத்திற்குப் பிறகு வரும் சத்திய சோதனை இருக்கும் என்று நினைக்கிறேன்.

சின்ன திரைப்படங்கள் என்றாலே  நல்ல கதைதான் முக்கியம்.பெரிய நடிகர்களோ பெரிய செலவுகளோ இல்லாத பட்சத்தில்நல்ல கதையை நம்பித்தான் படம் எடுக்க வேண்டும். நல்ல கதை, வித்தியாசமான கதை இருந்தால் தான் அது சிறந்த படம்.கமர்சியல் படம் என்பது வேறு சிறந்த படம் என்பது வேறு.வணிகத்திற்குத் தேவையான கதை, வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று இரண்டு உண்டு.'ப்ராமிஸ்' திரைப்படம் வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று நினைக்கிறேன்.

மக்கள் சின்ன படங்களைப் பார்க்க வருவதற்குப் பயப்படுகிறார்கள் அதற்குக் காரணம் சில சின்ன படங்கள்தான்.அனுபவம் இல்லாதவர்கள் படம் எடுக்கிறார்கள்.அது பார்க்கும் படியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் படம் ஒரு நம்பிக்கையைத் தருகிறது.எந்தப் படம் வந்தாலும் இது ஓடும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது .அந்த அளவிற்குக் கதை உள்ளது.

இன்று ரீரிலீஸ் படங்களுக்கு உள்ள வரவேற்பு ,நேரடிப் படங்களுக்கு இல்லாமல் இருக்கிறது.'படையப்பா' ரீரிலீஸ் வந்தது; ஓடியது. இப்போது 'மங்காத்தா ' வந்திருக்கிறது.நாலு நாட்களுக்குத் திரையரங்குகள் நிரம்பிவிட்டன.அதனால் புதிய நேரடிப் படங்கள் திணறுகின்றன.இப்போது  'திரௌபதி 2 'வந்திருக்கிறது. நல்ல விதமாகவே அதைப்பற்றிப் பேசுகிறார்கள் .ஆனால் வசூலில் திணறுகிறது.

இது பற்றி மோகன் ஜி தைரியமாகப் பேசுகிறார். 'மங்காத்தா' வை விட 'திரௌபதி 2' வசூல் குறைந்துவிட்டது என்கிறார்.அவரது தைரியத்தைப் பாராட்ட வேண்டும். 'மங்காத்தா' அளவிற்கு தன் படத்திற்கு வசூல் இல்லை என்று தைரியமாகச் சொல்கிறார் யாருக்கு அந்தத் தைரியம் வரும்?படம் வெளியான இரண்டாவது நாளே சக்சஸ் மீட் வைக்கிறார்கள்.

ஆனால் மோகன் ஜி மங்காத்தாவுடன் வந்தது தவறு, தன் படத்திற்கு வசூல் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறார் .அவரது தைரியத்தைப் பாராட்ட வேண்டும். அதுவும் மூன்றாவது நாளில் பேட்டி கொடுக்கிறார் என்றால் அவரது தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

பொய்யாக என் படம் வெற்றி, இரண்டாவது நாள் வசூல், மூன்றாம் நாள் வசூல் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஓபன் ஸ்டேட்மெண்டாக வெளிப்படையாகக் கூறுகிறார். ஆனால் மக்களிடம் படம் நன்றாக இருக்கிறது என்று பேச்சு இருக்கிறது.ஒரு சின்ன பட்ஜெட்டில் படம் இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே என்று பேசிக்கொள்கிறார்கள்.

ஏனென்றால் மக்கள் சின்ன படங்களுக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். அதைவிட ஏற்கெனவே வெற்றியடைந்த ’மங்காத்தா’விற்குச் செல்கிறார்கள்.

சின்ன படத்தைப் பார்ப்பதற்குப் பயத்தைத் தமிழ் திரையுலகில் யார் கொடுத்தது? 

எப்போதும் கே. ராஜன் சார் தயாரிப்பாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்.

’எஜமான்’, ’மன்னன்’, ’தெறி’ போன்ற ரஜினி, விஜய் படங்கள் ரீ ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. சின்ன படங்கள் வரும்போது ரீரிலீஸ் வந்தால் எழும் பிரச்சினைகளுக்கு வழி காண வேண்டும். அதற்குரிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். ஏற்கெனவே 'மங்காத்தா' ஓடிய படம் தான். அது மறுபடியும் ஓடினாலும் ஓடவிட்டாலும் பிரச்சினை இல்லை.அது ஏற்கெனவே வெற்றிப் படம் தான். ’படையப்பா’ ஓடா விட்டால் ரஜினி மார்க்கெட் ஒன்றும் ஆகாது. ’மங்காத்தா’ ஓடாவிடாவிட்டால் அஜித்துக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் நேரடிப் படங்களுக்கு வெளியீடு என்பது  பெரிய வாழ்க்கைப் பிரச்சினை. இன்னும் ரஜினி படங்கள், விஜய் படங்கள் வெளியாகத் தயாராக இருக்கின்றன. ரீரிலீஸ் என்பது அவர்களுக்கு ஃபேண்டஸி .நேரடிப் படம் வெளியீடு என்பது இவர்களுக்கு வாழ்வாதாரம்.

சினிமாவில் இருந்து கொண்டு நாம் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயம் ’ஜனநாயகன்’.ஒரு படம் சென்சார் பிரச்சினையில் இத்தனை நாள் இழுத்துக் கொண்டிருப்பது என்பதைக் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. எல்லாவற்றையும் விட்டு விடுங்கள் அது ஒரு படம்.ஒரு படம் என்கிறபோது சென்சார் என்ன செய்ய வேண்டும்? வன்முறை என்றாலோ ஆபாசமாகஇருக்கிறது என்றாலோ அனுமதிக்க மாட்டார்கள். வெட்டச் சொல்வார்கள். அவை கூடுதலாக இருந்தால் 'ஏ: சான்றிதழ் கொடுப்பார்கள்., கொடுத்து ரிலீஸ் பண்ணிக் கொள்ளுங்கள் என்பார்கள். இவ்வளவு தானே விஷயம்? கட் பண்ணச் சொன்னால் கட் பண்ண முடியாது என்று சொன்னால்தான் பிரச்சினை .இதில் என்ன பிரச்சினை? நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.ஒரு திரைப்படம் சென்சருக்குப் போய் ஏன் இத்தனை நாள் வெளியிடப்படாமல் இருக்கிறது? மத்திய அரசுக்கும் சென்சாருக்கும் நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன் . 

மத்திய அரசுக்கு ஆயிரம் கோடிக்கு மேலாக இங்கிருந்து சினிமா வரிப் பணம் உங்களுக்கு வருகிறது,இது டிக்கெட்டில் இருந்து மட்டுமே வருகிறது. நடிகர்கள்,நடிகைகள் 200 கோடியில் இருந்து 50 கோடி என்று வாங்குகிறார்கள். அதிலிருந்து சம்பளத்திலிருந்து இன்னொரு ஆயிரம் கோடிக்கு மேல் உங்களுக்கு வரிப்பணம் வருகிறது.இப்படி. அந்தப் பணத்திலிருந்து தான் சென்சார் போர்டுக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள்.அதைத் தயவு செய்து மனதில் வையுங்கள்.ஒரு திரைப்பட வெளியீடு ஒரு மாதம் தாண்டியும் முடிவுக்கு வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? மத்திய அரசும் தணிக்கைத் துறையும் யோசிக்க வேண்டும்.

இது ஏதோ ’ஜனநாயகன்’ படத்திற்கும் விஜய் படத்திற்கும் இருக்கின்ற பிரச்சினை தான் என்று மற்றவர்கள் சும்மா இருக்கக் கூடாது .நாளை நமக்கும் வரும். எனவே இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். ’ஜனநாயகன்’ விஷயம் நீதிமன்றம் சென்றிருக்கிறது .அங்கே சென்றால் வெளிப்படைத் தன்மை  வேண்டும் அல்லவா?  ’ஜனநாயகன்’ படத்தைத் தணிக்கை செய்து விரைவில் வெளிவர வேண்டும். காத்திருக்கிறோம் . நன்றி வணக்கம்'' என்றார்.

தயாரிப்பாளர் (கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது ,

"நான் வர்மக்கலை கற்றுக் கொள்ளும் போது எங்கள் வாத்தியார் என்னிடம் என் ஆள்காட்டி விரலில் பிளேடால் கீறி,’ இது சத்தியம் என் உயிருக்கு ஆபத்து என்று வந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்துவேன்’ என்று வெற்றிலையில் எழுதி சத்தியம் வாங்கினார்.அதற்கு இன்று வரை பயந்து கொண்டிருக்கிறேன். பயன்படுத்துவதற்கும் பயம், சொல்லிக் கொடுப்பதற்கும் பயம்.

சத்தியம் என்ற வார்த்தைக்கு உள்ள பலம் பிராமிஸுக்குக் கிடையாது. அம்மா என்ற வார்த்தைக்குள்ள பலம் மம்மிக்குக் கிடையாது. 'ப்ராமிஸ்' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக உள்ளது.படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்"என்று கூறி வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,

'இங்கே விழாவில் தயாரிப்பாளர் ஆரம்பத்தில் பேசும்போது அனைவருக்கும் நன்றி கூறினார். ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும் கொடுக்காதவர்களுக்கும் நன்றி என்று ஒருவரையும் விடாமல் நன்றி கூறினார். அதுதான் தமிழ்ப் பண்பாடு. அதேபோல இங்கே குத்துவிளக்கேற்றினார்கள். இருள் விலக வேண்டும் ஒளி பெருக வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் விளக்கேற்றுகிறார்கள். அதுவும் தமிழ்ப் பண்பாடு தான். அப்படிப் பண்பாட்டை மறக்காமல் வந்திருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.அப்படி ஒரு அற்புதமான தயாரிப்பாளர், இயக்குநர் இங்கே வந்திருக்கிறார்கள்.நல்ல ஒரு திருப்தியான படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தோம்.  அருமையான பாடல்களைப் போட்டுக் காட்டினார்கள், பாடல்கள், காட்சிகள், எடிட்டிங் எல்லாமே நன்றாக உள்ளது என்று அனைவரும் சொன்னார்கள். ஆனாலும் படம் வெற்றி பெற வேண்டும்.உண்மையாக வாழ்த்த வேண்டும் என்று தான் நாங்கள் வந்திருக்கிறோம். அதற்காகவே அவர்களை வாழ்த்துகிறேன்.இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் . நிச்சயம் இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுப்பார். எடுத்தால் சினிமாவுக்கு லாபம் ; தொழிலாளர்களுக்கு லாபம்.

தமிழ் சினிமாவில் பழிவாங்குவதற்கு என்றே சில காரியங்கள் நடக்கின்றன. ’ஜனநாயகன்’ படம் .அதன் கதாநாயகன் பெரிய கதாநாயகன். அவர் சாதாரணமாக நடித்து இருந்தால் ,இந்தப் பிரச்சினை வந்திருக்காது அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நான் தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று அடம் பிடித்தார் அல்லவா? அதில் பிடித்தது பிரச்சினை. யாருமே எடுத்ததுமே நானே முதலமைச்சர் ஆவேன் என்று  சொன்ன வரலாறு கிடையாது.கட்சி ஆரம்பிக்கலாம் தவறில்லை, தேர்தலில் நின்று மக்களிடம் பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்கி மக்கள் பெருவாரியான எம்எல்ஏக்களைத்  தேர்ந்தெடுத்துப் பெரும்பான்மை வந்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால்,முதல்வர் ஆகலாம். எடுத்தவுடனேயே நான் முதலமைச்சராகவேன் என்று யாரும் சொன்னதில்லை.அப்புறம் ஐம்பது அறுபது ஆண்டுகளாக கட்சி நடத்துபவர்கள் என்ன ஆவார்கள்? அதில் யாருக்கோ ஒருவருக்கு காழ்ப்புணர்ச்சி வந்துவிட்டது.கூட்டணிக்குக் கூப்பிட்டுப் பார்த்தார்கள் .இல்லை, நான் தனியே தான் நிற்பேன் என்றார். தனியேதானே நாங்கள் ஜனநாயகனைப் பார்த்துக் கொள்கிறோம் என்று பிரச்சினை செய்கிறார்கள்.

யார் என்ன என்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு படம் எடுத்து முடித்தாகி விட்டது. கதாநாயகனுக்கு மட்டும் 250 கோடி மீதி 100 கோடி ரூபாய் படம் எடுக்கும் செலவு  .இப்படி படம் முடிந்துவிட்டது.ஒரு தயாரிப்பாளர் செலவுகளைச் செய்துவிட்டார். இப்போது கஷ்டம் யாருக்கு?தயாரிப்பாளருக்குத்தான். கதாநாயகன் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.கதாநாயகன் படம் வரவில்லை என்று வருத்தப்படுவார்; பணம்வரவில்லை என்று வருத்தப்படுவாரா? பணம் வாங்கிவிட்டார்.எப்போதோ கொடுத்து விட்டார்கள். அதனால் அவருக்கு எந்த சிரமமும் இல்லை.ஆனால் பணம் போட்ட தயாரிப்பாளர் நிறுத்தப்படுகிறார். அதில் எந்த நியாயமும் இல்லை. இப்படிப் பழிவாங்குவதற்கு நியாயமே இல்லை . இது பழிவாங்குதல் ஒன்றுதான். இதில் பணம் போட்ட முதலாளி அவஸ்தைப்படுகிறார்.

டிசம்பர் 19 படம் பாக்கிறார்கள்.டிசம்பர் 22 இல் சர்டிபிகேட்  கொடுக்கப்பட வேண்டும் என்றால் சில கட் கொடுக்கிறார்கள். சர்டிபிகேட் 24 ஆம் தேதி வரும் என்று நம்பினால் வரவில்லை. பதிலே இல்லை. சென்சார் போர்டு பதில் சொல்லவில்லை. நீதிமன்றம் சென்றால்,பதிலே இல்லை.இது ஒரு அரசியல் பழிவாங்குதல் இல்லையா?

நாளையே அவர் இந்தக் கட்சியுடன் கூட்டணி என்று சொல்லட்டும் நாளை சாயந்திரம் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு சர்டிபிகேட் போய்விடும் .இதெல்லாம் அரசியல் விளையாட்டுகள். இது தவறு. இதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை .ஏனென்றால் அவர்களுக்குக் கஷ்டம் வரும்போது அவர் யாருக்கும் குரல் கொடுத்ததில்லை. அதனால் அவருக்கும்  யாரும் கொடுக்கவில்லை. எல்லாரும் அவரைக் கைவிட்டு விட்டார்கள். தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும் இதைக் கண்டித்து மாநில அரசின் மீது குறை சொல்வதில் அர்த்தமே இல்லை. முதலமைச்சர் கூட இப்படி செய்யக்கூடாது என்று ட்விட்டரில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதற்கு மத்திய அரசுதான் காரணம். 

எந்த அரசாங்கம் இருந்தாலும் ஜனநாயகனின் பிரச்சினையை முடித்து நீதிமன்றப் பிரச்சினையை முடித்து படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும். அதான் என்னுடைய நோக்கம். அவர் அடுத்த படம் தயாரித்து ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைகொடுக்க வேண்டும். ’ஜனநாயகன் ’ படம் விரைவில் வரவேண்டும். உங்கள் அரசியலுக்காக சினிமாவைப் பழி வாங்காதீர்கள்.

சத்தியமாகச் சொல்கிறேன் இந்த 'ப்ராமிஸ்'  படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்'' என்றார்.

விழாவில் 'ப்ராமிஸ்' படக்குழுவினருடன் வேலூர் பகுதியில் இருந்து திரளாக வந்திருந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


'Yennodu Vaa Veedu Varaikkum’: Musical Tribute Concert to Celebrate 25 Years of Gautham Vasudev Menon


Chennai is all set to witness a soulful celebration of music and cinema with ‘Yennodu Vaa Veedu Varaikkum’, an upcoming musical tribute concert honouring 25 glorious years of acclaimed filmmaker Gautham Vasudev Menon. Known for his signature class, style, and emotionally resonant storytelling, his films have left an indelible mark on Indian cinema, particularly through their timeless music.

The concert brings together an extraordinary lineup of celebrated singers and performers who have been an integral part of the musical legacy associated with Gautham Vasudev Menon’s films. The stellar ensemble includes Karthik, Sid Sriram, Blaaze, Paal Dabba, Alphonse, Shashaa Tripathi, Sathya Prakash, Haripriya, and Charulatha Mani, promising an unforgettable evening of iconic songs and live renditions that span generations.

Designed as a nostalgic yet contemporary musical journey, 'Yennodu Vaa Veedu Varaikkum' will celebrate the melodies that have defined love, longing, youth, and urban romance: hallmarks of Gautham Vasudev Menon’s cinema over the past 25 years.

The event is produced by Preethi Srivijayan’s Oru Oorile Oru Film House with Sidhu Nair, and is scheduled to take place on 1st February from 7:00 PM to 9:00 PM at the prestigious Music Academy, Chennai.

Bookings are now open on BookMyShow, and tickets are filling fast, with fans and music lovers eager to be part of this landmark celebration.



Kauvery Hospital, Alwarpet Performs One of the World’s First complex TAVR-in-TAVR-in-SAVR Procedure with Bioprosthetic Valve Fracture and Dual Cerebral Protection for a man aged 78 years



Chennai: 

Kauvery Hospital, Alwarpet has successfully performed a highly complex and rare TAVR-in-TAVR-in-SAVR procedure with bioprosthetic valve fracture on a 78-year-old patient, marking one of the first such procedures in the world. The advanced transcatheter intervention was undertaken to treat a repeatedly failing heart valve in a patient with a long and challenging history of aortic valve disease.

The patient was first diagnosed with severe aortic stenosis, a condition where the heart’s main valve narrows and restricts blood flow to the body. In 2005, he underwent open-heart surgery (Surgical Aortic Valve Replacement-SAVR) to replace the diseased valve with a bioprosthetic (tissue) valve. Over time, this valve degenerated, and in 2019, he underwent a transcatheter (TAVR) valve-in-valve replacement—a minimally invasive procedure in which a new valve is placed inside the old surgical valve without reopening the chest.

In the years following the second procedure, the patient once again developed symptoms such as breathlessness and fatigue. Investigations revealed increasing pressure gradients across the valve, indicating that blood flow through the heart valve was again being obstructed. Further evaluation suggested leaflet thrombosis (blood clot in the leaflets) and become thickened, and do not open fully. While anticoagulation medication temporarily improved valve function, the problem recurred whenever treatment was stopped, causing early degeneration of the Transcatheter Heart Valve.

Given the patient’s advanced age, multiple prior valve interventions, and high surgical risk, repeat open-heart surgery was considered a higher risk option.

Upon referral to Kauvery Hospital, Alwarpet, a multidisciplinary heart team led by Dr Rajaram Anantharaman & Dr C Sundar conducted a detailed assessment using advanced 3D echocardiography and CT imaging. These investigations confirmed persistent leaflet thickening and restricted valve opening despite medical therapy, due to under-expandion of the previous placed TAVR allowing leaflets to open in restricted fashion (pin-wheeling). After careful planning, the team decided to proceed with a TAVR-in-TAVR-in-SAVR procedure, placing a new transcatheter valve inside the previously implanted transcatheter valve inside surgical valve.

To further optimise valve expansion and blood flow, a bioprosthetic valve fracture technique was employed. This involves controlled expansion of the existing TAVR in SAVR to high pressure to fracture the frame of the first surgical valve. This will create more space and full expansion of the newly implanted valve, and function more effectively. Given the high neurological (stroke risk) associated with such complex procedures, dual cerebral protection was used during the intervention with two Spider FX devices placed in both Carotids arteries (supplying brain) to reduce the risk of stroke by capturing the debris and preventing from reaching the brain.

The procedure was particularly challenging due to the patient’s bicuspid aortic valve anatomy (two leaflets rather than three) associated aortopathy with moderately dilated aorta (the main artery from the heart was slightly enlarged, increasing procedural risk), and pseudo-coarctation (a narrowing of part of the thoracic aorta with narrowing and tortousity)mimics coarctation, combined with the failure of both a prior surgical valve and a prior transcatheter valve.

Speaking about the case, Dr. Rajaram Ananthraman, Director for Transcatheter Heart Valve Therapies, Kauvery Hospital, Chennai, said,

“The challenging procedure needed meticulous planning and precision by the Heart Valve Team. Despite these complexities, the procedure was successfully completed. The patient showed rapid recovery, was shifted to the ward the next day, and discharged within 48 hours. Post-procedure assessments confirmed excellent valve function, stable neurological status, absence of major complications, and full mobility.”

Commenting on the achievement, Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Group of Hospitals, said,

“This case reflects the depth of clinical expertise available at Kauvery Hospital, Alwarpet. Managing such high-risk and complex structural heart cases locally reduces the need for patients to seek care abroad and reinforces Chennai’s growing role as a centre for advanced cardiac interventions.”

Kauvery Hospital, Chennai continues to strengthen its leadership in structural heart disease management through advanced transcatheter procedures, state-of-the-art imaging, and comprehensive multidisciplinary cardiac care, offering patients access to world-class treatment close to home.

VIDEO HERE:

India’s Most Comprehensive Heart and Lung Transplant Program Gives Critically Ill Patients a Second Chance at Life



Chennai: 

Apollo Hospitals, Chennai continues to set national benchmarks in the treatment of advanced heart and lung disease, driven by one of India’s most comprehensive heart, lung, and ECMO-supported transplant programs. The transplant team, with significant national and international experience, have performed 600+ heart and lung transplants, managed over 2,000 transplant patients, 1,000+ Extracorporeal Membrane Oxygenation (ECMO) cases, along with 250+ Left Ventricular Assist Devices (LVAD) procedures and 250+ Chronic Thromboembolic Pulmonary Hypertension (CTEPH) interventions.


The multidisciplinary heart-lung transplant and MCS program at Apollo expertly manages patients with end-stage heart and or lung failure, offering personalised solutions for those who no longer respond to maximal medical therapy. Be it a stabilising, bridging or definitive treatment with transplanting   hearts and lungs, or implanting durable mechanical cardiac pumps for failing hearts, our patients are supported through a continuum of focused and evidence-based care. 


The team also offers comprehensive solutions for even the most complex cardiopulmonary conditions, such as the gold standard treatment of Pulmonary Endarterectomy (PEA) for appropriate patients with CTEPH, where the chronic blood clots in the lung arteries are removed surgically.


The press conference held to mark this milestone featured patients from different age groups and levels of illness severity, who shared how their lives were transformed by the program. Among them were Mr. Raja Sivagurunathan (59), who survived a critical phase on ECMO support for 48 days before undergoing an emergency double-lung transplant; Mr. B. Saravanan (45), who developed sudden and severe lung failure and was supported on life-saving machines for two weeks until a successful lung transplant; and Mr. Radhae Shyam Raghuvanshi (72), whose condition worsened abruptly and who was airlifted to Chennai before receiving a double-lung transplant after advanced support. 

Commenting about ECMO and Transplantation, Dr. Srinivas Rajagopala, Senior Consultant & Clinical Lead - Pulmonology, Sleep Medicine and Lung Transplant, Apollo Hospitals Chennai said, “These outcomes demonstrate how early and appropriate use of ECMO can fundamentally alter the course of severe lung failure. It provides a vital bridge allowing time for stabilisation, informed decision-making, and preparation for lung transplantation. Success lies in constant vigilance, multidisciplinary teamwork, and highly personalized care. Our goal is always meaningful recovery, not merely short-term survival.”

Dr. Kumud Kumar Dhital, Head of Heart and Lung Transplantation at Apollo Hospitals, Chennai, emphasized “Patients suffering from advancing heart and lung failure, with escalating medical therapy and declining quality of life, deserve to be informed of the transplant options at a far earlier stage.  Outcomes improve significantly when patients are referred early and managed with strong, protocol-driven hospital care. Age itself is not a limitation - what matters is careful evaluation, optimization, meticulous surgery, expert after-care in the ICU, and life-long post-discharge continuity of care so as to maximize chances of long-term survivorship.”

Dr. IIankumaran Kaliamoorthy, CEO – Chennai Region, Apollo Hospitals also participated in the press conference.

As India’s burden of advanced heart and lung disease continues to rise, Apollo Hospitals remains at the forefront of comprehensive cardiothoracic transplantation, combining innovation, expertise, and compassionate care- proving that even the most critical organ failure can be transformed into a second chance at life.

Apollo Hospitals delivers 360-degree care through an integrated, multidisciplinary model involving cardiology, pulmonology, cardiothoracic surgery, anaesthesia, critical care, transplant coordination, rehabilitation, and seamlessly coordinates this with post-discharge and long-term follow-up. The program’s focus extends beyond survival to restoring functional independence and quality of life for patients while fully informing and supporting their families.

ECMO serves as a vital life-support technology within this ecosystem. This mechanical support temporarily takes over the function of the heart and/or lungs when conventional therapies fail. By oxygenating blood outside the body, ECMO allows failing organs to rest and recover or acts as a crucial bridge to recovery or transplantation. The program integrates VV-ECMO for lung support, VA-ECMO for cardiac and combined heart-lung failure. LVADs in the form of implantable and mechanical heart pumps are offered to suitable candidates as durable alternatives or bridge to heart transplantation.

VIDEO HERE:

ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு- வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!



தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்'  படத்தின் மூலம் அறிமுகமானார்  நேதாஜி பிரபு. மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். 'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு. 

சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில்  அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில்  30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார்.

இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாக களம் இறங்கி உள்ளார் நேதாஜி பிரபு.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு ,அர்ப்பணிப்பு, என அத்தனை கோணங்களிலும் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்துள்ளார்.

சினிமா என்பது தன்னை நோக்கிக் காதலுடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களைக் கைவிடாது என்பதற்கு உதாரணமாக அவர்   இதைச் செய்துள்ளார்.சினிமாவை யாரும் ஏனோ தானோ என்றோ அலட்சியமாகவோ  பார்க்கக் கூடாது. தனக்கான தகுதி உள்ளவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதைச் சொல்லும் வகையில் இதைச் செய்துள்ளார் .இதைப் பார்க்கும்போது இது நாள் வரை படை திரட்டி வந்தவர், இப்போது போர் தொடுக்க இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

நேதாஜி பிரபுவின் இந்த அயராத உழைப்பின், நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவாகியுள்ள  இந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு இங்கே...

காட்சி ஊடகங்கள் அனைத்திலும் முகம் காட்டும் வகையில் நேதாஜி பிரபு ஆர்வமாக இருக்கிறார்.

‘அனந்தா’ விமர்சனம் 



சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் தான் ‘அனந்தா’. புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகிமையையும், அவரது பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவான ஆன்மிகத் திரைப்படம். ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள இப்படம், பக்தி மற்றும் தெய்வீக நம்பிக்கையை முன்னிறுத்தும் குறுங்கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

கதைக்களம்:

புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா மருத்துவமனையில் தொடங்கும் கதை,  இறுதி அழைப்பை முன்னிட்டு ஐந்து பக்தர்களை ஒன்றிணைக்கிறது. மும்பை தொழிலதிபர், பாலக்காட்டைச் சேர்ந்த முதியவர், காசியில் வசிக்கும் தாய், சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் மற்றும் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு தம்பதி என வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இந்தக் கதாபாத்திரங்கள், தங்கள் வாழ்க்கையில் சாய்பாபா நிகழ்த்திய தெய்வீகத் தலையீடுகளை அனுபவக் கதைகளாக பகிர்கிறார்கள். இக்குறுங்கதைகள், பக்தியின் வலிமையையும் நம்பிக்கையின் ஆழத்தையும் எடுத்துரைக்கின்றன.

ஜெகபதி பாபு, தொழிலதிபர் வேடத்தில் பொருத்தமாக இருந்தாலும், அவர் சொந்தக் குரலில் பேசியிருந்தால் பாத்திரத்திற்கு மேலும் வலு சேர்ந்திருக்கும். அபிராமி வெங்கடாசலம் நடனக் கலைஞராக சில உணர்ச்சிகரமான தருணங்களை நன்றாக கையாள்கிறார். 

புட்டபர்த்தி நிர்வாகியாக வரும் நிழல்கள் ரவி அமைதியான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். ஓய்.ஜி. மகேந்திரன் நடித்த பாலக்காட்டு முதியவரின் கதையில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. மனைவியை இழந்த சோகம், தனிமை, அதன்பின் ஏற்படும் மனமாற்றம் என உணர்வூட்டமாக நடித்துள்ளார். 

அவரது மனைவியாக நடித்த ஸ்ரீரஞ்சனி இயல்பான நடிப்பை வழங்குகிறார். சுஹாசினி, தாயின் தவிப்பையும் சரணாகதியையும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறார். ஆனால் 

கதை கொஞ்சம் நாடகம் போல் இருந்தது.....

மொத்தத்தில் இந்த 'அனந்தா' சிறந்த பக்தி.   

RATING: 4/5

Actor- Director K. Bhagyaraj thanks press and media on completing  50 Years in Cinema



Chennai:

Celebrated filmmaker and actor K. Bhagyaraj, marking an extraordinary 50 years in the film industry, met members of the press today on the occasion of his birthday. During the interaction, PROs Diamond Babu, M Singaravelu and Riaz K Ahmed, felicitated K. Bhagyaraj by presenting him with a shawl as a mark of respect. K Bhagyaraj also posed for photographs with the journalists who attended the event.


Addressing the gathering, K. Bhagyaraj extended his warm greetings to all journalists and media friends and conveyed his New Year wishes. He said that even today, he finds it hard to believe that he has completed 50 years in cinema. Recalling his early days, he shared that his friends and his mother always had immense faith in him and believed that he would succeed in films.


He reminisced about getting his first opportunity in cinema through the film '16 Vayathinile' , adding that actor Kamal Haasan had recently mentioned how everyone associated with that film went on to achieve remarkable success, something rare in the history of cinema. During his struggling days, Bhagyaraj revealed that he often introduced himself confidently as “Kovai Raja” without revealing his real name. It was during '16 Vayathinile' that he adopted the name Bhagyaraj, the name given to him by his mother. When the director noticed the name on the title card and asked who it was, the team explained that it was Rajan. Not wanting to lose his mother’s blessings, he decided to retain the name K. Bhagyaraj.


He expressed gratitude to the press for supporting and writing about him from his days as an assistant director. Recalling the film 'Kizhakke Pogum Rail', he mentioned that his director had once remarked that after him, it would be Rajan’s turn. Bhagyaraj spoke about his gradual journey—from assistant director to dialogue writer, screenplay writer, actor, and eventually director.


Sharing an amusing anecdote from 'Kizhakke Pogum Rail', he spoke about being tasked with bringing a donkey for the film, photographs of which later appeared on posters. His family jokingly asked if he had gone to cinema only to lose a donkey. At that time, his mother reassured him that his director would one day make him a hero. While that did come true, Bhagyaraj shared with emotion that his mother passed away before the film’s release, which remains a deep personal regret.


After debuting as a hero in his very first film, he went on to play a villain in 'Kanni Paruvathile', and later made his debut as a director. He thanked everyone who supported him through this journey, stating that before entering cinema, he only had the experience of watching films and no technical knowledge. He learned extensively by observing other directors’ work and developed a strong interest in reading books.


He fondly recalled a childhood incident that taught him the value of honesty. As a schoolboy, his mother would give him money to buy honey candy after school. One day, in her absence, he unknowingly gave a gold ring instead of money to the shopkeeper. Fortunately, the shopkeeper returned the ring to his mother, leaving a lasting lesson on integrity that shaped his character from a young age.


Bhagyaraj acknowledged his teachers for continuing to be a strong source of support in his life. He spoke about being deeply inspired by Puratchi Thalaivar MGR’s compassion towards people, Sivaji Ganesan’s respect for directors regardless of their experience, and Kamal Haasan’s extraordinary acting talent, which amazed him even in his youth. He recalled first seeing Rajinikanth during '16 Vayathinile' and remarked that Rajinikanth remains unchanged even today.


Thanking the media once again, Bhagyaraj said journalists have always stood by him and played a key role in taking every film to the audience in the right manner. Completing 50 years in cinema still feels unbelievable to him, he said.


Concluding his speech, K. Bhagyaraj announced that discussions are currently underway to direct a web series and a feature film, and that he is gearing up for several new initiatives this year. He expressed his heartfelt gratitude to everyone for their unwavering love and support.

'சல்லியர்கள்' படத்தின் விமர்சனம்



இந்தியன் சினிவே சார்பில், கிட்டு இயக்கத்தில் சத்யதேவி, S.கருணாஸ், திருமுருகன், ஜானகி, மஹேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சௌந்தரராஜன், மோகன், சந்தோஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'சல்லியர்கள்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

சிங்கப் பிரதேசத்தின் ராணுவத்தை எதிர்த்து போரிடும் தமிழ்ப் பிரதேச அமைப்பினர் காயம் அடைந்தால், அவர்களை காப்பாற்ற போர்க்களத்தில் ‘மெடிக்கல் பங்கர்’ என்ற தற்காலிக பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது. அங்கு டாக்டர்கள் சத்யாதேவியும், மகேந்திரனும் பணியாற்றுகின்றனர். 

தமிழ்ப் பிரதேச அமைப்புகளின் மெடிக்கல் பங்கர்களை அழித்தால், அவர்களை வீழ்த்திவிடலாம் என்று திட்டமிடும் சிங்கப் பிரதேச ராணுவம், உடனடியாக விமான தாக்குதல் நடத்துகிறது. போராளிகள் என்றாலும், எதிரிகள் என்றாலும், உயிருக்கு போராடும் வீரர்களை காப்பாற்ற அந்த டாக்டர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை களம்....

மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சத்யதேவி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அளவான உரையாடல், தெளிவான முடிவு, விவேகமான செயல்பாடு என்று தமிழ் ஈழ போராளி மருத்துவர்களை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். 

பதுங்கு குழியில் பணியாற்றும் அவரது உடல் மொழி, தோற்றம் என அனைத்தும் அவரை ஒரு நடிகையாக அல்லாமல் ஒரு மருத்துவ போராளியாகவே பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்து விடுகிறது.

மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார். நடிகர் மகேந்திரன் என்ற அடையாளம் எந்த இடத்திலும் தெரியாதது, அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. 

கலை இயக்குநர் முஜுபீர் ரஹ்மானின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள பதுங்கு குழி மருத்துவனை உள்ளிட்ட படத்தில் இடம் பெறும் சிறு சிறு விசயங்களில் கூட பல நுணுக்கள் இடம்பெற்றிருக்கிறது.

ஒப்பனை கலைஞர் அப்துல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பூங்குழில் கிட்டு ஆகியோரது பணி கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் உண்மைக்கு நெருக்கத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. 

எழுதி இயக்கியிருக்கும் டி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலை போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத விசயங்களை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, இனப் பாகுபாடின்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்குடன் செயல்படும் தமிழ் ஈழ போராளி மருத்துவர்களின் வாழ்வியலை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். எழுதி இயக்கிய தி.கிட்டு, எந்தவித பாகுபாடுமின்றி உயிரை காப்பாற்றும் குறிக்கோளுடன் செயல்படும் டாக்டர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். ஆனால் 

சில வன்முறை காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.....

மொத்தத்தில் இந்த 'சல்லியர்கள்' தமிழர்களின் நாடி துடிப்பு....

RATING 4/5


 'தி பெட்' விமர்சனம் 



ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் எஸ். மணிபாரதி எழுதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்யா ஸ்ரீதர், விக்ரம் ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'தி பெட்'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஸ்ரீகாந்த், பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர், வாரத்தின் கடைசி நாட்களை கொண்டாட ஊட்டிக்கு செல்கின்றனர். அவர்களுடன் கால்கேர்ள் சிருஷ்டி டாங்கே இருக்கிறார். அங்குள்ள ரிசார்ட்டில் ஐந்து பேரும் தங்குகின்றனர். ஸ்ரீகாந்தை தவிர மற்ற மூவரும் அதிகமாக மது அருந்தியதால் தூங்கிவிடுகின்றனர். 

ஸ்ரீகாந்தும், சிருஷ்டி டாங்கேவும் வந்த வேலையை விட்டுவிட்டு, இரவு நேரத்தில் ஊட்டியின் அழகை ரசிக்க காட்டுக்கு செல்கின்றனர். அங்கு தனது காதலை ஸ்ரீகாந்த் சொல்ல, அதை சிருஷ்டி டாங்கே ஏற்க மறுக்கிறார். அப்போது ஸ்ரீகாந்துடன் வந்த விக்ரம் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த போலீஸ் விசாரிக்கிறது. திடீரென்று சிருஷ்டி டாங்கே மாயமாகிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை...

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், மென்பொருள்துறை பணியாளர் வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.விலைமகள் எனினும் அவர் மீது காதல் கொண்டு அவரைப் பாதுகாக்கத் துடிக்கும் காட்சிகளில் பாராட்டுப் பெறுகிறார்.எதிர்பாரா சிக்கல் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

ஸ்ருஷ்டி டாங்கே அழகும், அளவான கவர்ச்சியும் கலந்த நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்து, திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஈர்க்கிறார். 

பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், ஜான் விஜய், தேவி பிரியா, திவ்யா ஸ்ரீதர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் இடத்தை நிரப்பி படத்துக்கு நிறை சேர்க்கிறார்கள். ஆனால் 

கதையின் ஓட்டத்தில் கூடுதல் கவனம் தேவை...

மொத்தத்தில் இந்த 'தி பெட்' அமர வைக்கும்.....   

RATING: 3.5/5

  

Director Vetrimaran Launches the First Look of ‘Lakshmikanthan Kolai Vazhkku’



The much-anticipated first look of Lakshmikanthan Kolai Vazhkku was officially launched by acclaimed filmmaker Vetrimaran, marking a significant milestone for the team.

The cast and crew of the film met Director Vetrimaran and presented him with the first look, along with select visuals from the film. After watching the clips, he appreciated the efforts, conviction, and sincerity of the entire team and extended his heartfelt wishes for the film’s success. The team expressed their gratitude to him for graciously launching the first look and encouraging the project.

Lakshmikanthan Kolai Vazhkku is directed by Dayal Padmanabhan, known for his rooted and impactful storytelling. The film is produced by K.V. Sabareesh under the banner of 2M Cinemas, with Dayal Padmanabhan also serving as co-producer under D Pictures.

The ensemble cast includes Vetri, Rangaraj Pandey, Brigida, Lizzie Antony, Saravanan, Lollu Sabha Maaran, Loka Kannan, Narmatha, Kavitha Bharathi, Kaniya Bharathi, Aruvi Madhan along with Suba. Veerapandiyan.

Periyarist Suba. Veerapandiyan in an important role, adding strong ideological depth to the narrative.


Technical Team:

Story & Direction: Dayal Padmanabhan

Screenplay & Dialogues: Kavitha Bharathi & Dayal Padmanabhan

Cinematography: M.V. Paneerselvam

Editing: V. Boopathi

Music & Background Score: Darbuka Siva

Production Design: Anbu

Makeup: Kuppusamy

Costume Design: Ramesh

Production Executive: Mariyappan & Kuttykrishnan

Public Relations: Rekha

Currently progressing at a brisk pace in and around Chennai, Lakshmikanthan Kolai Vazhkku is shaping up to be a powerful and socially relevant cinematic experience.

We Thank Director Vetrimaran, for graciously launching the first look and for your valuable encouragement to the entire team.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.