Latest Post

ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை கருத்தரங்கு!



சென்னை:

ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை கருத்தரங்கின் பின்னணியில் டாக்டர் B. ராமமூர்த்தி நினைவுச் சொற்பொழிவை திரு. கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார்

ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை (AASNS - Asian Australasian Neurosurgery) கருத்தரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் டாக்டர் B. ராமமூர்த்தி சொற்பொழிவில், முன்னாள் ஆளுநரும், இராஜதந்திரியும், சிறந்த நிர்வாகியுமான திரு. கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள், சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார்.

காவேரி மருத்துவமனையின் வழிகாட்டியும், நரம்பியல் இயக்குநரும் மருத்துவருமான கிரிஷ் ஸ்ரீதர் பேசுகையில்:

“டாக்டர் B. ராமமூர்த்தி இந்தியாவின் முன்னோடி நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், இந்திய நரம்பியல் சங்கம் (NSI – Neurological Society of India) & ஆசிய – ஆஸ்திரலேசியன் சங்கத்தின் நிறுவன உறுப்பினராவர். அவர் குருவாகவும், வழிகாட்டியாகவும், நண்பராகவும் பலருக்கு வழிகாட்டியுள்ளார்”


திரு. கோபாலகிருஷ்ண காந்தி ‘கோபத்தின் தந்திரமான வழி (The Wily way of Anger)’ எனும் தலைப்பில், கோபமுறும் மனிதனுக்கு ஏற்படும் தாக்கத்தையும், அதன் விளைவுகளையும் பற்றிச் சுட்டிக் காட்டினார். மேலும், “கோபம் என்பது ஒரு உலகளாவிய மனிதப் பண்பு, எந்த மனிதனும் அதிலிருந்து விடுபட முடியாது. இது, அவ்வப்போது நம்மை வெல்லும் ஒரு உயிரினத்துடன் வாழ்வதைப் போன்றது. நாம் வெட்கப்பட வேண்டிய விஷயங்களைச் சொல்லவும் செய்யவும் நம்மை ஆட்படுத்தி விடுகிறது” என்றார்.

AASNS-இன் சர்வதேச சந்திப்பில், 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20க்கும் மேற்பட்ட சர்வதேச ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர். தலை மற்றும் முதுகுத்தண்டு காயம், முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை மற்றும் மூளைக் கட்டி அறுவைச் சிகிச்சை குறித்த ஆலோசனைகள் 2 நாட்கள் நடந்தன. இச்சந்திப்பில், இளம் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பு இருந்தது.

AASNS கல்விக் குழுவின் துணை தலைவரும், NSI இன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர், “எந்தவொரு நரம்பியல் அறுவைச் சிகிச்சை சமூகத்திற்கும் கல்வி எப்போதும் ஒரு முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. மூத்த மற்றும் திறன் வாய்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் அனுபவமும் நிபுணத்துவமும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது முக்கியம். டாக்டர் ராமமூர்த்தி இளம் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் கல்வி மற்றும் வழிகாட்டுதலுக்கு முன்மாதிரியாக இருந்தார். இத்தகைய கல்வித் திட்டத்தின் பின்னணியில் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது மிகப் பொருத்தமானது” என்றார்.


ICD Bestows Honorary Fellowship on SRM Chancellor



Chennai: 

The International College of Dentistry (ICD) Section VI (India, Sri Lanka & Nepal) has conferred the prestigious Honorary Fellowship upon Dr. T.R. Paarivendhar, Founder Chancellor of SRM Institute of Science and Technology (SRMIST). This distinguished fellowship was presented to Dr. Paarivendhar, a distinction rarely bestowed upon non-dentists/non-medical. This honour recognises his contribution to the fields of education and healthcare delivery. 

Dr. Paarivendhar was recognised for his exceptional contributions to both fields during ICD's annual meeting and convocation, held at SRMIST in Kattankulathur, in collaboration with SRM Kattankulathur Dental College and HospitalThe Honorary Fellowship was presented by ICD's Global President, Dr. Ian M. Doyle, and ICD Section VI President, Dr. Meera Verma, among other distinguished guests.

In his acceptance speech, Dr. Paarivendhar highlighted the unique importance of dentistry, stating that it plays a vital role in helping individuals walk upright, speak clearly, and laugh with confidence. He expressed heartfelt gratitude to ICD for honoring him, a non-medical professional, with such a prestigious recognition.

He also emphasised the humanitarian work being carried out at SRM Kattankulathur Dental College, where dental care is provided free of charge to the underprivileged. "We don't just treat the poor. we make them smile. Service to the less fortunate is truly service to God," he said

VIDEO HERE:

'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' விமர்சனம் 




தனுஷ் இயக்கத்தில் R சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி, பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா P வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

படம் காதல் தோல்வி பாடலில் தொடங்குகிறது. காதல் தோல்வியை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் இளைஞன், பிரபு (பவிஷ்). இவனுக்கு கால் கட்டு போட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர் இவனது பெற்றோர் (சரண்யா-ஆடுகளம் நரேன்). இதற்காக அவன் பார்க்கும் பிரீத்தி (பிரியா வாரியர்) கடைசியில் அவனது பள்ளி தோழியாக இருக்கிறார்.

இருவரும் பேசி பழக டைம் கேட்கின்றனர். திடீரென பிரபுவிற்கு அவனது முன்னாள் காதலியான நிலாவின் திருமண அழைப்பிதழ் வருகிறது. இதனால் தனது காதல் குறித்தும், காதல் தோல்வி குறித்தும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஹீரோ. பணக்கார பெண் நிலா-நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சமையல் கலை பயிலும் பிரபு, இருவரும் காதலிக்கின்றனர்.

இவர்களுக்கு இடையில் நிலாவின் பணக்கார அப்பா சரத்குமார் வில்லனாக வர, அங்கிருந்து இவர்களுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. நிலாவின் நலனுக்காக பிரபு அவளை விட்டு பிரிய, இருவருக்கும் பிரேக்-அப் ஆகிறது. இந்த கதையை கேட்கும் பிரீத்தி, திருமணத்திற்கு செல்லுமாறு பிரபுவிடம் சொல்கிறார். நிலாவுடன் வந்தால், அவளுடன் வாழ்க்கை, தனியாக வந்தால் பிரீத்தியுடன் வாழ்க்கை என்ற முடிவுடன் திருமணத்திற்கு செல்கிறான் ஹீரோ. பிறகு என்ன நடந்தது? என்பதே கதை.... 

ஹீரோ, ஹீரோயினை தாண்டி அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால், அது மேத்யூ தாமஸ் நடித்த ராஜேஷ் கதாபாத்திரம்தான். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேனின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம். ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை ஓகே. பிரியங்கா மோகன் நடனம் சிறப்பு. பவிஷ், ரப்பியா கத்தூண், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் அறிமுகப் படத்திலேயே தங்களால் முடிந்த அளவுக்கு பெஸ்ட்-ஐ கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு, பாடல்கள், கலை இயக்கம் என அனைத்தும் சரியாக உள்ளது.

செண்டிமெண்ட் காட்சிகள் மனதை பாதிக்கவில்லை.... கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் இந்த 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' கலகலப்பு

RATING 4/5


2025 தொடக்கத்தில்  முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'




இந்தத் திரைப்படத்தில் கார்த்திகேசன், அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் நடித்து இருந்தனர்.

மணி மூர்த்தி இயக்கியிருந்தார்.  ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார்.

காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது பேசப்பட்டது.

இப்படத்தைப் பார்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள்  கடைசி வரை சஸ்பென்சை சிதற விடாமல் பராமரித்து,யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொண்ட ஒரு திருப்தியான க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் ஏற்பட்டது என்று படக்குழுவினைப் பாராட்டி இருந்தார்கள்.

படத்திற்கு நல்ல மாதிரியான  நேர் நிலையான விமர்சனங்கள் வந்திருந்தன.

உதாரணத்திற்குச் சில படங்களைத் தர நிர்ணயம் செய்யும் IMDB படத்திற்கு 10 க்கு 9.9 தர மதிப்பெண்கள் கொடுத்திருந்தது.'புக் மை ஷோ 'தளம் 10 க்கு 9 குறியீட்டைக் காட்டியது.

தமிழின் முன்னணி இதழான தினத்தந்தி 'துப்பறியும் திரில்லர் கதையை அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் எகிற வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி திறமையான இயக்குநராக கவனம் பெறுகிறார் மணி மூர்த்தி 'என்றும் 'கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் 'என்றும் பாராட்டிருந்தது .

இந்து தமிழ் திசை இதழ் 'யூகிக்க முடியாத ஆனால் நம்பகமான திருப்பங்களால் நிறைந்த திரைக்கதையால் இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு' என்று கூறியிருந்தது.

தினகரன் இதழ், 'ரகு ஸ்ரவன் குமாரின் பின்னணி இசை, கிரைம் த்ரில்லருக்குத் தேவையான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 'என்று பாராட்டியது.

மாலைமலர் இதழ், 'யாருமே எதிர்பாராத திருப்பத்தை இறுதிக்காட்சிகளில் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. சுவாரசியம் நிறைந்த கிரைம் திரில்லர் படமாக லாரா படம் அமைந்துள்ளது 'என்று பாராட்டியது.

ZEE தமிழ் NEWS, ' க்ரைம் தில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு' லாரா' நிச்சயம் பிடிக்கலாம்' என்று கூறியது.

டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில இதழ் ,'  ஒரு சிறு நகரம் சார்ந்த மர்மக் கதையாக  இது சரியாக எடுக்கப்பட்டுள்ளது' என்று பாராட்டியது .

அது மட்டுமல்லாமல் நான்கரை நட்சத்திர மதிப்பையும் கொடுத்து இருந்தது.

இவ்வாறு ஊடகங்களில் கவனம் பெற்றுப் பாராட்டுகளைப் பெற்ற  'லாரா' படம் 

வணிகரீதிலும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் திரைப்படங்களிலேயே முதலில் வெற்றிக்கனி ருசித்த படம் என்ற பெருமையைப் பெற்றது.

இப்போது 'லாரா' திரைப்படம்  'டெண்ட் கொட்டா' ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி அடுத்த தளத்திலான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

வெளியான அன்றே ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தியது. படக் குழுவினர் படத்தின் அடுத்த வெற்றிப் பரிமாணத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


‘கூரன்’  ட்ரெய்லர் வெளியீட்டு விழா 




‘கூரன்’  திரைப்படத்தின்  ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
 
விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது,
 
பொதுவாகவே ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் ஒரு வசனம். இது வித்தியாசமான படம் .இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத படம்.இந்த வார்த்தைகளை எல்லாருமே சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இது உண்மையிலேயே வித்தியாசமான படம்.நான் உண்மையிலேயே வித்தியாசமானது என்று சத்தியமாக சொல்லக் கூடிய கதை இது. பலவகையில் இது வித்தியாசமான படம். இந்த படத்தில் நாய் தான் கதாநாயகன். ஒரு ஈ பழிவாங்கி ஒரு படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு யானை பழி வாங்கிய வெற்றிப் படத்தை, ஒரு பாம்பு பழிவாங்கிய வெற்றிப் படத்தை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இதில் மனிதர் மீது ஒரு நாய் பழிவாங்குகிறது.
 
தன்னுடைய போராட்டத்திற்கு நீதிமன்றம் வரை படியேறுகிறது.இது ஒரு வித்தியாசம். இரண்டாவது, இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை டூயட் இல்லை.நடனம் இல்லை. இதில் நடித்தவர்கள் எல்லாம் பார்த்தால் நாய், நான் ஒரு 80 வயதுக்காரன், ஒய்.ஜி. மகேந்திரன் என் வயதுதான்.இப்படி இதில் நடித்தவர்கள் முழுதும் வயதானவர்கள் .அது ஒரு வித்தியாசம்.
 
என்னைப் பற்றி எல்லாரும் பேசினார்கள். அது கடவுள் கொடுத்த பரிசு. ஓடிக் கொண்டே இருக்கிறேன், இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். எதையும் பாரமாக தலையில் போட்டுக் கொள்வதில்லை .கடைசி வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.உடனிருப்பவர்கள் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் .நான் அலுவலக வரும்போது அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஒன்றும் வேலை இல்லை என்றால் கூட அனைவருடனும் பேசிக் கொண்டிருப்பேன். ஏதாவது செய்து கொண்டிருப்பேன். ஏனென்றால் வீட்டில் உட்காரக்கூடாது என்று நினைப்பேன்.சக்கர நாற்காலியில் உட்காரும் வாழ்க்கை எல்லாம் வேண்டாம் என்று காலையில் 9:00 மணிக்கு அலுவலகம் வந்து விடுவேன்.
 
இந்த விழாவில்  எங்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் மேடையில் இருக்கிறார்கள். கொடைக்கானலில் ஜனவரி மாதக் குளிரில் நாங்கள் சென்றோம் .அதுவே ஒரு மறக்க முடியாத அனுபவம்.நடுங்கிக்கொண்டே சென்றோம் படப்பிடிப்பு ஆரம்பித்ததும், அதெல்லாம் போய்விடும்.
 
இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஜுரம் வந்ததே கிடையாது .அங்கே போனபோதுதான் வந்தது.ஆனால் படப்பிடிப்பு இடத்திற்குப் போனால் எனக்கு எல்லாமும் போய்விடும். அந்த நம்பிக்கையில் தான் அங்கே நான் சென்றேன்.சொன்ன மாதிரியே  என்னைத் தண்ணீரில் எல்லாம் குளிக்க வைத்தார்கள், ஜுரம் போய்விட்டது.
வியாதி என்பது நம் மனம் நினைப்பதுதான். 
 
வாழ்க்கையைச் சுலபமாக எடுத்துக் கொண்டால் கடைசி வரை நன்றாக இருக்கலாம்.என் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு மெசேஜ்  இருக்கும். இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு அது பிடித்திருந்தது.நாய் நீதிமன்றம் செல்கிறது. அதுவே புதிதாக இருந்தது.நான் எழுபது படங்களில் ஐம்பது படங்களில் மனிதன் நீதிமன்றம் சென்றது போல் தான் எடுத்திருக்கிறேன்.நாயோ பூனையோ போனது போல் எடுக்கவில்லை. அதுதான் புதிதாக இருந்தது. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
 
இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை, கண்கலங்கினார்கள். திரைப்படங்களில் எழுத்தாளன்தான் கதாநாயகனின் குணச் சித்திரத்தையே படைக்கிறான்.இங்கே நாம் நடிகர்களைக்  கொண்டாடுகிறோம். கதாநாயகன் அளவுக்கு இயக்குநர்களையும் கொண்டாட வேண்டும். அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வேண்டும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று.
 
சில படங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது. எழுத்தாளன் படைக்கும் பாத்திரங்கள் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். இவனைப் போல வாழ வேண்டும் என்கிற மாதிரி முன்னுதாரணமாக அந்தப் பாத்திரம் இருக்க வேண்டும். கத்தி எடு தலையை வெட்டு என்று படம் பார்த்து விட்டு வெளியே செல்கிறவனும் கத்தி எடுத்து கையை வெட்டு, தலையை வெட்டு என்று செய்து கொண்டிருந்தால் இளைய சமுதாயம் என்ன ஆகிறது? அந்த பொறுப்புணர்வு வேண்டும் .சினிமா என்பது சாதாரணமானதல்ல. இந்தப் படத்தில் கத்தி இல்லை; ரத்தம் இல்லை;துப்பாக்கி சத்தம் இல்லை; ஆனால் ஒரு சக்தி வாய்ந்த விஷயம் இருக்கிறது.அதை நாங்கள் சத்தமாகத் தீவிரமாகச் சொல்லாமல் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக சொல்லி இருக்கிறோம்.
 
சில நல்ல படங்கள் இப்போது செய்கிறார்கள். அதை நான் தவறு சொல்லவில்லை. ஆனால்  படம் பார்க்க நூறுபேர் வருகிற போது  ஒருவராவது மனமாற்றம் அடையும்படி படங்கள் இருக்க வேண்டும்.இது ஒரு வன்முறை இல்லாத படம். ஆனாலும் சக்தி வாய்ந்த படம்.வன்முறை இல்லாத முறையில் தானே நாம் சுதந்திரமே வாங்கினோம்?காந்தியடிகளின் அஹிம்சைதானே வெள்ளையனை விரட்டி அடித்தது.
 
ஒரு காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று தெரியும். அவன் கற்பழிப்பான், கொலை செய்வான், 10 பேரை வெட்டுவான்.அப்படித்தான் இருந்தது. இப்போது அதையெல்லாம்  கதாநாயகர்கள் செய்கிறார்கள். யார் வில்லன் யார் கதாநாயகன் என்று தெரிவதில்லை.படம் பார்க்கும் இளைஞர்களை நாம் எப்படிக் கொண்டு போக வேண்டும்?
 
அம்மாவைப் பிள்ளை வெட்டுகிறான்.மாமியார் மருமகளும் சேர்ந்து கொண்டு பிள்ளையைக் கொல்கிறார்கள். அப்பாவைக் கொல்கிறார்கள்.சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை .அதை  நாம் சரியாகச் செய்தால் இந்த  சமுதாயத்தைத் திருத்த முடியும். இயக்குநர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அந்த பொறுப்புணர்வும் கடமையுணர்வும் சமூக உணர்வும் வேண்டும்.
 
நான் பத்து ஆண்டு காலமாகச் சில படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு திருப்திகரமாக அமைந்த படம் இது. நான் அனுபவித்துச் செய்து இருக்கிறேன். இரண்டு மணி நேரம் அழகாக அமர்ந்து பார்க்க வைக்கும் படியான படம். மூன்று மணி நேரப் படமாக உருவானது அதை எடிட்டர் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆக்கினார். லெனின் சார் படத்தைப் பார்த்தார் அதில்  பத்து காட்சிகளைத் தூக்கிவிட்டு இருபது நிமிடங்களைக் குறைத்து விட்டார். படம் இரண்டு மணி நேரம் தான். அவ்வளவு நேர்த்தியாக உள்ளது. ஒரு குடும்பம் மாதிரி இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இதில் நடித்திருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் அந்த பைரவா நாய்தான் .நாங்கள் எல்லாரும் உதிரிப்பூக்கள்தான், துணை நடிகர்கள்தான். இதில் நடித்திருக்கும் நான் உள்பட அனைவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். இவ்வாறு இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசினார்.

Building ValueCorns, Celebrating Entrepreneurship: Startup Singam Introduces ValueCorn - A Revolutionary Shift in the Startup Ecosystem Focused on Value Creation Over Valuation



Chennai:

In a bold move to reshape the startup ecosystem, Startup Singam has introduced ValueCorn, a pioneering initiative designed to encourage entrepreneurs to focus on long-term value creation rather than getting caught in the race for high valuations.

With many startups struggling under inflated valuations, ValueCorn aims to reignite the spirit of sustainable growth and meaningful impact in the entrepreneurial world. 

The initiative is grounded in a simple yet powerful idea: 

that true success in business comes not from the size of your valuation, but from the tangible value you create for people, communities, and industries. As the global startup scene has become increasingly obsessed with achieving massive valuations, the pressure to deliver rapid returns has led to many startups facing challenges such as unsustainable business models, employee turnover, and resource depletion. Investors and entrepreneurs alike have become fixated on achieving "unicorn" status, often at the expense of building strong, resilient businesses that create real value for customers and society. As part of its commitment to simplify fundraise and amplify success stories, Startup Singam aims to become the go-to platform for entrepreneurs looking to build game-changing ventures. The platform is designed to offer a holistic support system, including mentorship, funding guidance, networking opportunities, and educational resources. By bringing together a diverse range of entrepreneurs, investors, and industry experts, Startup Singam seeks to create an ecosystem where ideas can thrive and transform into successful businesses.

ValueCorn – The Key Factors: ·        

Value-Centric Approach: Rather than chasing arbitrary numbers, ValueCorn will encourage businesses to focus on products, services, and solutions that directly impact and benefit their customers and communities ·         Sustainability Over Scale: Encouraging sustainable business practices and long-term growth, the initiative promotes steady progress and innovation over the short-term rush to market dominance. Transparent Metrics: By introducing a more transparent set of success metrics that look beyond the valuation, ValueCorn will enable investors to support businesses with solid growth potential, ethical operations, and a vision for the future. 

Mr. Kumar Vembu, Founder – Mudhal Partners & GO Frugal Technologies and Co-Founder of ZOHO, said:

"Startups are meant to change the world, but all too often, they are distracted by the pressure to become the next 'unicorn'. With ValueCorn, we aim to shift the focus back to creating real value – for customers, employees, and society at large. We want to help entrepreneurs build businesses that are not just financially successful but contribute meaningfully to the world around them."

Mr. Hemachandran, Co-Founder, Startup Singam said:

“As we celebrate the success of Startup Singam launch, we are equally delighted to celebrate entrepreneurship. We intend to make this success even more meaningful by taking the Startup Singam program to Hyderabad, Bengaluru and Trivandrum by the end of next calendar year. The company will also establish a dedicated fund to support startups that align with these values. This initiative aims to make Tamil Nadu and thereby India a hub for forward-thinking entrepreneurs who are ready to lead the next generation of businesses grounded in value creation” 

Mr. Balachandar, Co-founder of Startup Singam stated:

"With the launch of ValueCorn initiative, we are not just supporting startups; we are cultivating a culture of value creation, innovation, responsibility, and the celebration of entrepreneurship. As we expand Startup Singam, we are committed to fostering regional collaboration and providing the resources necessary for startups to thrive."


KLM Axiva Finvest Marks 25th Silver Jubilee with Fortuna ‘25 Employee Summit Tamil Nadu



Chennai: 

KLM Axiva Finvest, a leading NBFC with a valuation of over ₹2000 crore, celebrated its 25th Silver Jubilee with the Fortuna ‘25 Employee Summit Tamil Nadu . The company, which boasts a pan-India presence with over 1000 branches and has Lady Superstar Nayanthara as its brand ambassador, whose strong presence in Chennai significantly contributes to the growth of the entire Tamil Nadu business, continues to amplify its vision and values through such milestone initiatives.

The Fortuna ‘25 Employee Summit Tamil Nadu was inaugurated by Mr. T. P. Sreenivasan, IFS (Retd.), Chairman of KLM Axiva Finvest and former Indian Ambassador to America . The event was presided over by Mr. Shibutheckumpuram, Executive Director, the promoter and backbone of the company, alongside the company’s CEO, Mr. Manoj Ravi. The summit brought together employees from across Tamil Nadu to commemorate this significant milestone.

The summit served as a key highlight of the year-long Silver Jubilee celebrations, uniting employees to reflect on the company’s remarkable journey and strategize for its future growth. Zonal Head Mr. Julius Jobert Arun and Regional Heads shared insights on the company’s achievements and ambitious goals, motivating employees to play an integral role in its continued success. CEO Mr. Manoj Ravi outlined the company’s strategic roadmap for 2025, emphasizing innovation, digital transformation, and sustained growth.

The Fortuna ‘25 Employee Summit Tamil Nadu also featured a full-day motivational training session, designed to enhance professional skills and foster team spirit. Long-serving employees were honored for their unwavering dedication and contributions, reinforcing the company’s commitment to employee empowerment.

With its strong pan-India presence, a legacy of success, and plans for its IPO in the coming years, KLM Axiva Finvest is poised for a dynamic and transformative future. The Fortuna ‘25 Employee Summit Tamil Nadu marks a significant milestone in its Silver Jubilee celebrations, which will culminate in December 2025 with the unveiling of its ambitious 2030 roadmap, setting the stage for the company’s continued expansion and success.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.