காரில் கடத்தி வரப்பட்ட 1கோடிக்கு மேல் ஹவாலா பணம் சிக்கியது!
கும்மிடிப்பூண்டி அருகே ஏளாவூர் சோதனைச் சாவடியில், போலிசார் சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட 1கோடிக்கு மேல் ஹவாலா பணம் சிக்கியது.
திருவள்ளூர் மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் மேற்பார்வையில், இன்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில், எளாவூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலிசார் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு வெள்ளை நிற ஃபார்ச்சூனர் காரில் வந்த முவரிடம் போலிசார் விசாரணை நடத்தியதில், ஈ பாஸ் ஏதும் இல்லாமலும், அவர்கள் முன்னுக்கு, பின் முரணாக பதில் கூறவே உடனடியாக போலிசார் காரை சோதனை செய்ததில் காரில் பணம் கட்டு, கட்டாக இருந்தது அது சுமார் 1 கோடிக்கும் மேல் இருக்கலாம், என கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து, போலிசார் காரில் வந்தவர்களிடம் தொடர்ந்து துருவி,துருவி விசாரித்தும், காரில் வந்தவர்கள் அதற்கான எந்த முறையான ஆவணங்களையும் வைத்தில்லாத நிலையில் காரையும், பணத்தையும் கைப்பற்றிய போலிசார் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக