பிரதமர் மோடி விட்ட தாடி: பின்னாடி என்ன?!

பிரதமர் மோடி விட்ட தாடி: பின்னாடி என்ன?!  




புதுடில்லி: 


ஊரடங்கு துவங்கிய பின், நாடு முழுதும் பலர் தாடி வளர்த்தனர்; இவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். இப்படி தாடி வளர்த்த பலர், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், தாடியை எடுத்து விட்டனர்; 


ஆனால் மோடியின் தாடி, நீண்டு கொண்டே போகிறது. ஊரடங்கில் மற்றவர்களைப் போல், தானும் தாடியுடன் இருப்பதாக பிரதமர் காட்டிக் கொண்டாலும், விஷயம் அதுவல்ல என்கின்றனர் அதிகாரிகள்.


பிரதமர் வீட்டில் அனைத்து வசதிகளும் உண்டு. மோடிக்கு முடி திருத்தம் செய்வதற்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள், பிரதமர் வீட்டிலேயே இருக்கின்றனர். 

கொரோனாவிலிருந்து பிரதமரைப் பாதுகாக்க, முடி திருத்துபவர்களை, பிரதமரை நெருங்க அனுமதி அளிக்கவில்லை, பாதுகாப்பு அதிகாரிகள்.அடுத்த ஆண்டு ஏப்ரலில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன.


மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கவுள்ளது. அங்கு, பா.ஜ., அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நம் தேசியக் கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.

இதனால், ரவீந்திரநாத் தாகூர் போல், நீண்ட தாடியுடன் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காகவே, மோடி, இப்படி தாடி வளர்க்கிறார் என்கின்றனர், அதிகாரிகள்.


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் யாரைச் சந்தித்தாலும், அவர்களுக்கு இடையே ஒரு கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



லேபிள்கள்: ,

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.