நடிகர் கமலின் புதிய பட தலைப்பு?!
மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தையடுத்து கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று டைட்டில் லுக் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் இப்படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நடிகர் கமல் ஏற்கனவே விக்ரம் என்ற தலைப்பில் படம் நடித்திருக்கிறார். தற்போது நடித்து வரும் படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டைட்டில் லுக் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Super ❤
பதிலளிநீக்குSuper❤
பதிலளிநீக்கு