சோழிங்கநல்லூரில் காசாகிராண்ட் அறிமுகம் செய்த ‘காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி’
தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான காசாகிராண்ட் சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி என்னும் அடுக்குமாடி குடியிருப்பில் மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியானது, காசாகிராண்ட் சமீபத்தில் வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை உருவாக்கும் வகையில் தொடங்கப்பட்ட “காசாகிராண்ட் ப்ரிவிலேஜ்” (CASAGRAND Privilege) எனும் புதிய தொகுப்பின் ஒரு பகுதியாகும். ஏராளமானோர் கலந்து கொண்ட இதில் மாலை பொழுதை மகிழ்விக்கும் விதமாக நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, கலக்கப் போவது யார் புகழ் AZHAR ன் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சென்னையைச் சேர்ந்த ‘சென்னை ஸ்ட்ரீட் பேண்ட்’டின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றன.
வாடிக்கையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு காசாகிராண்ட் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களும் இங்கு குடியிருப்புகளை வாங்கியவர்களும் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். இது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது.
இதில் கலந்து கொண்ட பலர், நீண்ட நாட்களுக்கு பிறகு இது போன்ற நிகழ்ச்சியில் தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். காசாகிராண்ட் தனது வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழும் வாடிக்கையாளர்களை மதிக்கிறது.
அவர்களை போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை இந்நிறுவனம் நடத்தி வருகிறது.
சோழிங்கநல்லூரில் இருந்து 5 நிமிட தூரத்தில் காசாகிராண்ட்டின் பர்ஸ்ட்சிட்டி உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் தனித்தன்மையுடன் நவீன தொழில்நுட்பத்தில் கண்கவர் தோற்றத்தில் கட்டப்படுகின்றன.
இந்த குடியிருப்புகள் ரோமன் கட்டுமானக் கலையில் 15 ஏக்கரில் பசுமை நிறைந்த சூழலில் அமைய இருக்கிறது. இங்கு 100 உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் 1693 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவை 2, 3 மற்றும் 4 படுக்கை அறைகளை கொண்டிருக்கும். காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி வீடு வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில் ஈடு இணையில்லாத வாழ்க்கை முறையை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் TN/01/Building/0367/2020. என்ற தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக