101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை சென்னை, சோழிங்கநல்லூரில் அறிமுகப்படுத்தியது, டேக் டெவலப்பர்ஸ்!

101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை சென்னை, சோழிங்கநல்லூரில் அறிமுகப்படுத்தியது, டேக் டெவலப்பர்ஸ்! 
சென்னை:

சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் (DAC Developers), சென்னை, சோழிங்கநல்லூரில் அதன் 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டமான 'டேக் பிரத்யங்கிரா’-வின் (DAC Prathyangira) திட்டத்தின் அறிமுக விழாவை இன்று (பிப்ரவரி 16) சென்னையில் நடத்தியது. இதனையொட்டி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய லோகோவையும் வெளியிட்டது. இவ்விழாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் திருமதி சுஹாசினி மணிரத்னம், எஸ்.பி.ஐ. வங்கியின் (SBI Bank) தலைமைப் பொது மேலாளர் திரு. ஆர். ராதாகிருஷ்ணா, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் மாண்புமிகு திருமதி புஷ்பா சத்யநாராயணா, சவேரா ஹோட்டல்ஸ் (Savera Hotels) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் திருமதி நீனா ரெட்டி, மாஃபா ஸ்டிராடர்ஜிக் கன்சல்டன்ட்ஸ் (MA FOI Strategic Consultants) நிறுவனத்தின் இணை நிறுவனர் திருமதி லதா பாண்டியராஜன், எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனத்தின் மண்டல மார்க்கெட்டிங் தலைவர் திருமதி எஸ். பத்மாவதி ஆகியோர் இணைந்து புதிய லோகோவை வெளியிட்டனர். இந்நிகழ்வின்போது டேக் டெவலப்பர்ஸின் 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டமான - சோழிங்கநல்லூரில் உருவாக்கப்படவிருக்கும் 'டேக் பிரத்யங்கிரா'-வை அறிமுகப்படுத்தியது, இந்நிறுவனம். முன்னணி வங்கியாளர்கள், தொழிலதிபர்கள், சேவை வழங்குநர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


இதனைத் தொடர்ந்து, 'பெண்கள் உயர்வு' (Women Beyond) குறித்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பெண்களின் சிந்தனையைத் தூண்டும் குழு விவாதமும் நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட லோகோவைப் பற்றி உற்சாகத்துடன் பேசிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் எஸ். சதீஷ்குமார், "எங்கள் கட்டுமானத் திட்டங்களை நாங்களே வடிவமைத்து, செம்மைப்படுத்துவதன் மூலம் கட்டுமானத் துறையில் ஒரு முன்னோடி நிறுவனமாக உயரும் லட்சியத்தை புத்தம் - புதிய லோகோவின் சக்தி பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, திருப்தி ஏற்படுத்துவதற்காக சிறந்த, தரமான சேவையை வழங்க முயற்சிப்போம். சிறிய கட்டுமான வடிவமைப்பு வணிக நிறுவனமாக இருந்து, இன்று முழு சேவை வழங்கும் கட்டுமான நிறுவனமாக மாறியுள்ளோம். எதிர்காலத்தில் ஒரு பெரிய பல்துறை நிறுவனமாக உயர வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்காக கடினமாக உழைக்கத் தூண்டுகிறது, இந்தப் புதிய லோகோ. சோழிங்கநல்லூரில் உருவாக்கப்படவிருக்கும் எங்களது 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டமான 'டேக் பிரத்யங்கிரா', இந்தத் துறையில் எங்களின் வளர்ச்சிக்கு சான்றாக உயர்ந்து நிற்கும்" என்றார். புதிய லோகோவை வெளியிட்டது மட்டுமல்லாமல், பலரின் சிந்தனைக்கு விருந்தளிக்கும் ஒரு சுவாரஸ்யமான குழு விவாதத்துடன் இரவு நேரத்தை மெருகேற்றியதற்காக, 'வெற்றி பெற்ற பெண்மணிகளுக்கு' தனது மரியாதையையும் நன்றியையும் டாக்டர் சதீஷ்குமார் தெரிவித்தார். மேலும், வீடுகள் தொடங்கி தேசம் வரை கட்டியெழுப்புவதிலும், வளர்ப்பதிலும் பெண்கள் எவ்வாறு பிரிக்க முடியாத பகுதியாக உள்ளனர் என்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தினார். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.