'தீர்க்கதரிசி' திரை விமர்சனம்
PG மோகன் மற்றும் LR சுந்தர பாண்டி இருவரும் இணைந்து தீர்க்கதரிசியை இயக்கி உள்ளார்கள்.
விமர்சனம்:
காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணி புரியும் ஸ்ரீ மனுக்கு, அடையாரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட போவதாக போன் வருகிறது. இது விளையாட்டாக யாரோ பேசுகிறார் என்று எண்ணி ஸ்ரீ மனும் மற்றவர்களும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் ஆனால் அடையாரில் இந்த பெண் கொலை செய்யப்பட்டு விடுகிறார். அந்த மர்ம நபர் அடுத்து நடக்கும் விபத்து, பேங்க் கொள்ளை என பல விஷயங்களை கட்டுபாட்டு அறைக்கு சொல்கிறார். பேங்க் கொள்ளை தவிர வேறு எதையும் காவல் துறையால் தடுக்க முடிய வில்லை. சிறப்பு அதிகாரி அஜ்மல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசும் மர்ம நபரை கண்டு பிடிக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. மீடியா இந்த விஷயத்தை பெரிது படுத்த மர்ம நபரை மக்கள் தீர்க்கதரிசி என்று புகழ்கிறார்கள். இறுதியில் அந்த தீர்க்கதரிசி யார்? அவரை காவல் துறை கண்டுபிடித்ததா? அந்த மர்ம நபர் ஏன் இப்படி செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை....
காவல்துறை அதிகாரியாக வரும் அஜ்மல், ஸ்ரீமன் ,துஷ்யந்த் ,ஜெய்வந்த்,ஒய் ஜி மகேந்திரா, தேவதர்ஷினி , பூர்ணிமா பாக்யராஜ் என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமணியனின் இசையும், லக்ஷ்மனனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம். சஸ்பென்ஸ் க்ரைம் கலந்த படமாக இப் படத்தை இயக்கியுள்ளார்கள் இயக்குனர்கள் பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டி.
சத்யராஜின் ஃப்ளாஷ் பேக் கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம். போலீஸ் அலுவலகத்தின் உள்ளேயே சத்யராஜ் வந்து கொலை செய்வது இயக்குனரின் ஓவர் கற்பனை.....
மொத்தத்தில் இந்த 'தீர்க்கதரிசி' விறுவிறுப்பு....
கருத்துரையிடுக