ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்!
ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில் சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்தார் .
2012ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார் .இதை தொடர்ந்து இவர் இசையமைத்த மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும் ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது . இப்படங்களை தொடர்ந்து ஆள், உரு, அகடு, ஆயிரம் பொற்காசுகள் ,ஒயிட் ரோஸ் , கன்னட படமான கப்பட்டி போன்ற படங்களும் தற்போது வெளியான ராபர் படம் தொடர்ந்து தனது சிறந்த இசை வேலைப்பாடுகளை கொடுத்து வருகிறார். ராபர் படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த மக்களிடையே கவனத்தை ஈர்த்து, பெரிதளவில் பேசப்படுகிறது. மேலும் பல படங்களில் தற்போது இவர் பிசியாக வேலைபார்த்து வருகிறார் .
கருத்துரையிடுக