Latest Post

 தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் சரமாரியாக குத்திக் கொலை : அண்ணன் - தம்பி கைது




தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக குத்தி கொலை செய்த அண்ணன்- தம்பி ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் தொம்மையார் காலனியை சேர்ந்த மாடசாமி மகன் ஆறுமுகம் (31), அவரது தம்பி சொர்ண ராஜ் (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் தினசரி தூத்துக்குடி சிதம்பர நகர் அருகே உள்ள மைய வாடியில் வைத்து மதுபானம் குடிப்பது வழக்கம் 

இன்று மாலை 5 மணி அளவில் 3 பேரும் வழக்கம்போல் மையவாடி அருகில் உள்ள பூங்கா முன்பு உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். போதை அதிகம் ஆனதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணன்-தம்பி இருவரும் சிவபெருமாள் கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். உடனே இருவரும் கத்தியை காட்டி தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனாலும் பொதுமக்கள் இருவரையும் பிடித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவபெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் சிவபெருமாள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் வழக்குப் பதிந்து, ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  சம்பவ இடத்தை டவுன் டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட சிவபெருமாள் சடலம் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


நெல்லை போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்...

நெல்லையில் போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மக்தூம். இவருடைய மகன் அப்துல் காதர் (27).

 இவரது அண்ணன் சாகுல் தாழையூத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். அப்துல் காதர் தற்போது பாளை சங்கர் காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே அப்துல் காதர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

 கொலையாளிகளை பிடிக்க, நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மேல சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விஜி என்ற விஜயகுமார் (25), ராஜீவ்நகர் 2-வது தெருவை சேர்ந்த துரை மகன் சரவணன் (24), மில்லர்புரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பிரவீன்குமார் என்ற சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

 போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தை சேர்ந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த மார்ட்டின் என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக அப்துல்காதர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய சாத்தான்குளத்தை சேர்ந்த பாலமுருகன் (22), செல்லப்பா (25), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாதேஷ்வரன் (23), தூத்துக்குடி 3-வது மைலை சேர்ந்த காளியப்பன் (26) ஆகிய 4 பேர் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். 

 அவர்களை நீதிபதி தமிழரசன் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் சாத்தான்குளத்தை சேர்ந்த மாணிக்கராஜா (25) தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொள்ளை வழக்கில் நிதி நிறுவன மேலாளர் உட்பட 5பேர் கைது: 42 பவுன் நகைகள் மீட்பு



கடையம் அருகே வீடுபுகுந்து கொள்ளையடித்த சம்பவத்தில் நிதி நிறுவன மேலராளர் உட்பட  5பேர் கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகள் மீட்டனர்.


தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவநாடானூரைச் சேர்ந்த முத்துராஜா என்பவரது வீட்டில் கடந்த மாதம் 13-ந் தேதி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த 33.5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். முன்னதாக கோவிலூற்றைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 9 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.


இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிப்பதற்காக, ஆலங்குளம் காவல் துணை  கண்காணிப்பாளர்  பொன்னிவளவன் மேற்பார்வையில், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.


இதில் நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த பழவூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற ராமையா (35), அவருடைய உறவினரான வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து முத்துராஜா, கணேசன் ஆகியோரது வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. 


பின்னர் அந்த நகைகளை சேரன்மாதேவி தனியார் நிதி நிறுவன மேலாளரான சிவகுமரேசன் மூலமாக முக்கூடலைச் சேர்ந்த பிச்சுமணி, நெல்லை டவுனைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ், கார்த்திக், சிவகுமரேசன், பிச்சுமணி, கார்த்திகேயன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகளை மீட்டனர். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

'பிரண்ட்ஷிப்' திரைப்பட விமர்சனம்: லாஸ்லியாவுக்கு என்ன ஆனது?!


ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரே ஒரு பெண்ணாக இவர்கள் வகுப்பறையில் வந்து சேருகிறார் லாஸ்லியா.

சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது. இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.

இறுதியில் லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம் முழுக்க அதிக வசனம் பேசாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், ஆக்ஷன் என திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சதீஷ். காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்து இருக்கிறது.


நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா சுட்டித்தனமாக, இளமை துள்ளளுடன் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பு சில இடங்களில் செயற்கைத்தனமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் மற்றும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் அர்ஜுன். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஜே.எஸ்.கே.சதீஷ்.

நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா. அதே நேரத்தில் நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் மேலோட்டமாக இருக்கிறது. 

ஹர்பஜன் சிங்கை அதிகம் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். அவருக்கென்று கிரிக்கெட் காட்சிகள் வைத்திருப்பது போல் இருக்கிறது. உதயகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். சாந்த குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

"கோடியில் ஒருவன்" திரைப்பட விமர்சனம் 


நடிகர் விஜய் ஆண்டனியின் தாயார், தனது மகனை ஐ.ஏஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். தாயின் கனவை நனவாக்க சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ஹவுசிங் போர்டு பகுதியில் குடியேறுகிறார். அந்த ஹவுசிங் போர்டு பகுதியின் தரத்தையும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த நினைக்கிறார். 

இதற்காக ஒரு சில விஷயங்களை செய்ய முயலும் விஜய் ஆண்டனி, வில்லன்களால் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தாயின் கனவை விஜய் ஆண்டனி நனவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஜய் ஆண்டனி, மிடுக்கான வேடம் ஏற்று நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் அவர் ரொமான்ஸ் காட்சிகளில் கோட்டை விட்டுள்ளார். நாயகி ஆத்மிகாவுக்கு, அதிகளவு காட்சிகள் இல்லாதது ஏமாற்றம். இருந்தாலும் வரும் காட்சிகளில் அழகு, பதுமையுடன் வந்து செல்கிறார்.


இப்படத்தில் நிறைய வில்லன்கள் இருக்கிறார். அதில் குறிப்பாக கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு, உருவத்திலேயே பயமுறுத்தி வில்லத்தனத்திலும் மிரட்டி இருக்கிறார். மேலும் சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா, நேர்த்தியாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஒரு கவுன்சிலரால் என்னவெல்லாம் செய்ய முடியும், அவருக்கு வரும் தடைகள் என்னென்ன என்பதை புதுவிதமாக காட்டி இருந்தாலும், திரைக்கதை வேகத்தை கூட்டி இருந்தால் கோடியில் ஒருவனை இன்னும் ரசித்திருக்கலாம். ஹீரோ தோற்கும்படியான காட்சிகள் வைத்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம். 

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஹரீஷ் அர்ஜுனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.


“முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட  இசை வெளியீட்டு விழா!


Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும்  காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில்,  ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.  பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 )  ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவில் பேசிய....

நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது...

நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும்  ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம், நீண்ட காலமாக படம் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு புராஜக்ட பேசி நின்றுவிட்டது. என்னிடமும் அவரிடமும்  படம் செய்ய வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள், ஆனால் எல்லாவற்றையும் மீறி என் மீது நம்பிக்கை வைத்தார். ஒரு படத்தை ஆரம்பித்து, முழு நம்பிக்கை வைத்து இப்போது படத்தையும் முடித்து விட்டார். படத்திற்கு தேவையானதற்கு செலவு செய்ய, அவர் தயங்கியதே இல்லை. இந்தப்படம் இத்தனை அழகாக வர ரவீந்தர் மட்டுமே முக்கிய காரணம். இசையமைப்பாளர் தரணுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஶ்ரீஜர் கதை சொல்லும்போதே சிரித்து கொண்டே இருந்தேன். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதை ஶ்ரீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றியுள்ளார். யோகிபாபு பிஸியான நேரத்தில் எனக்காக இந்தப்படத்தை செய்துள்ளார். அவர் அன்புக்கு நன்றி. நான் 2017,18 காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன், அந்த நேரத்தில் என்னை நம்பி நான் நன்றாக இருக்க வேண்டும் என படம் செய்ய வந்தவர், ரவி மற்றும் விக்ரம் சுகுமாரன் இருவரும் தான். அதில் ரவீந்திரன் படத்தை முடித்து கொண்டு வந்துவிட்டார் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தப்படத்தில் நர்மதா வேணி மிக அழகாக கலை இயக்கம் செய்துள்ளார். அவர் போல் நிறைய பெண் கலை இயக்குநர்கள் வரவேண்டும். சமந்தா எனக்கு நண்பர் அவரிடம் அழகாக இருக்கீங்க, தமிழ் பேசறீங்க நான் சொல்லியிருக்கிறேன். அதே போல் தான் அதுல்யாவும் அழகாக இருக்கிறார் தமிழில் பேசுகிறார். சமந்தாவுடன் அவரை ஒப்பிடவில்லை. அதுல்யாவின் திறமைக்கு நிறைய வெற்றிகளை பெறுவார். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. 

நடிகர் யோகிபாபு கூறியதாவது...

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ரவீந்தர் சார், இயக்குநர் அனைவருக்கும் நன்றி. சாந்தனு ஒரு போன் செய்ததும் வந்து நடித்துதந்தேன் என்று சொன்னார். 15 வருடத்துக்கு முன்னாடி பாக்யராஜ் சார் ஆபீஸ் முன்  வாய்ப்புக்காக நின்றிருப்பேன், அப்போது என்னை கவனித்து, பாக்யராஜ் சார் சித்து பிளஸ் 2 படத்தில் ஒரு காட்சியில் வாய்ப்பு தந்தார். இப்போது பிஸியாக இருக்கிறேன் என்பதால் சாந்தனு படத்தை தவிர்ப்பது நன்றாக இருக்காது. அந்த நன்றியுணர்வில் தான் இந்தப்படத்தில் நடித்தேன். இன்னும் எத்தனை படங்கள் சாந்தனு கூப்பிட்டாலும் நடிப்பேன். இந்தப்படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. வாழ்த்தும் உங்கள் அனைவருக்கும் நன்றி. 

நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது...

இந்தப்படத்தில் மிகவும் பிடித்தது டைட்டில் தான் நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார் ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர் அவருக்கான நேரம் வரும். இரண்டு வருடங்களாக அவருக்கு எந்தப்படமும் வரவில்லை என்றார் உலகத்திலேயே எந்தப்படமும் வரவில்லை அதனால் அவர் கவலைப்பட வேண்டாம். நாயகி நன்றாக நடித்திருக்கிறார். பாண்டியராஜ் சார் பாக்யராஜ் சார் பற்றி ஒரு கதை சொன்னார். ஒரு படம் எடுக்கும் நேரத்தில் வேறொரு படத்தின் சாயல் தெரிய, ஒரே இரவில் அவர் தயார் செய்த கதை தான் ‘இன்று போய் நாளை வா’ என்றார், எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால் தான் அவர் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாப்படுகிறார். எனக்கு டான்ஸில் குரு அவர் தான் அவருடனும் சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் நன்றி. 

டான்ஸ் மாஸ்டர் ஷோபி கூறியதாவது...

நிறைய படங்கள் செய்கிறோம் ஆனால் நாம் நினைத்தது எல்லாவற்றையும் செய்து விட முடியாது ஆனால் இந்தப்படத்தில் நாங்களே தயங்கினாலும் ரவீந்தர் நினைத்தது எல்லாவற்றையும் செய்யுங்கள் என்று சொன்னார், அவருக்கு நன்றி. எல்லோரும் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. 

நடிகை மதுமிதா கூறியதாவது...

இந்த தயாரிப்பு நிறுவனத்தில் எனக்கு இது இரண்டாவது படம் நான் மயில்சாமி, மனோபாலா சார் இணைந்து நன்றாக காமெடி செய்திருக்கிறோம். தயாரிப்பாளர் மிகவும் ஸ்வீட்டானவர் மிகவும் கூலாகவே இருப்பார். அவரது மனதிற்கு நன்றி. இந்தபடத்தில் அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறோம் 

தயாரிப்பாளர் சித்ரா லக்‌ஷ்மண் பேசியதாவது...

சாந்தனுவை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும், அவரிடம் எனக்கு பிடித்தது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி. அவரது உழைப்புக்கு கண்டிப்பாக ஜெயிப்பார். இந்தப்படத்தின் கதையை கேட்டபோதே முழுதாக சிரித்ததாக சொன்னார்கள். இப்போது யாரும் கதையை முழுதாக ரெடி செய்துகொண்டு படப்பிடிப்புக்கு போவதில்லை, அந்த வகையில் இந்த டீம் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் ரவீந்திரன் நிறைய அனுபவம் கொண்டவர் ஆரம்பத்தில் நிறைய தடைகளை கடந்து கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வராவிட்டால் மிர்ச்சி சிவாவுக்கு இந்த அளவு டான்ஸ் தெரியும் என்பது தெரியாமல் போயிருக்கும் அவரை டான்ஸ் மாஸ்டராக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இந்தப்படத்தை காமெடி கொண்டாட்டமாக உருவாக்கியிருக்கிறார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  


மயில்சாமி கூறியதாவது....

என்னுடைய குருநாதர் பாக்யராஜ் சார் தான். நான் ஒரு நடிகரை பார்த்து வர வேண்டும் என நினைத்தது சுருளிராஜன் சார். நான் ஆரம்பத்தில் பாக்யராஜ் சாரிடம் வாய்ப்பு கேட்டு நடித்து அவரை டார்ச்சர் செய்திருக்கிறேன். பாக்யராஜ் எம் ஜி ஆர் ஆவி வருவது போல் ஒரு படம் எடுத்தார். அதில் எம் ஜி ஆருக்கு நான் தான் வாய்ஸ் குடுத்தேன் அதை எனக்கு கிடைத்த கௌரவமாக நினைக்கிறேன். இந்தப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக செலவு செய்து, காட்சிக்கு என்ன வேண்டுமோ அதை செய்து எடுத்துள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படம் மிக அற்புதமான நகைச்சுவை படமாக இருக்கும். எல்லோரும் நன்றாகவே காமெடி செய்திருக்கிறோம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி. 

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது...

முருங்கைக்காய் சிப்ஸ் பாடல்கள் நன்றாக இருந்தது. இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் ரவீந்தரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு நன்றாக நடிக்க வரும், வில்லனாக வாங்க சார் என்று சொன்னேன்  இந்தப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். எத்தனை தோல்வி அடைந்தாலும், அதை கடந்து வருகிறார் ரவீந்தர் மாதிரி தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு அவசியம். சாந்தனு YouTube சேனலில் கலக்கி வருகிறார். அவர் ஒரு படத்தை எழுதி இயக்கி நடிக்க வேண்டும். நாயகி அதுல்யா நன்றாக நடித்திருக்கிறார். தரணின் இசையில் மூன்று பாடல்கள் சூப்பராக இருந்தது. தியேட்டருக்கு ரசிகர்கள் திரும்ப வர ஆரம்பித்துள்ளது நிறைய மகிழ்ச்சியை தருகிறது. நிறைய படங்கள் வர வேண்டும், ஜெயிக்க வேண்டும். 

தயாரிப்பாளர் CV குமார் கூறியதாவது...

எத்தனையோ தோல்விகளை  தாண்டி சினிமா செய்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அவர் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது...

ரவீந்தர் மிக நல்ல மனிதர். சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பேரை அடித்தோம் என்பது முக்கியமில்லை எவ்வளவு பேரிடம் அடி வாங்கினோம் என்பதே முக்கியம். அது போல் எத்தனையோ தடைகளை தாண்டி சினிமா செய்கிறார் அவர் ஜெயிக்க வேண்டும். சாந்தனு எப்போதோ ஜெயிக்க வேண்டியவர் அவர் கடின உழைப்பிற்காக கண்டிப்பாக ஜெயிப்பார் இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் PL தேனப்பன் கூறியதாவது...

இந்த மேடையிலுள்ள அனைவரும் தயாரிப்பாளரை வாழ்த்துவதை பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும் நன்றி.

இயக்குநர் ஶ்ரீஜர் கூறியதாவது.... 

நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு திரைக்கதை எழுத முன்னுதாரணமாக இருந்தது பாக்யராஜ் சாரின் ‘திரைக்கதை பேசலாம் வாங்க’ புத்தகம் தான். அவரை வைத்து இயக்கியது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இயக்குநர் வாசு சாரின் மகன் சக்தி தான் தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அவருக்கு என் நன்றி. தயாரிப்பாளருக்கு லைன் சொன்னவுடனே அவருக்கு பிடித்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை 2 வருடம் உழைத்து உருவாக்கியிருந்தேன். தயாரிப்பாளர் கேட்டவுடனே உடனே ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார். சாந்தனுவுக்கும் கேட்டவுடன் இந்தப்படம் பிடித்துவிட்டது. இந்த டைட்டிலை தந்தது தயாரிப்பாளர் தான். தயாரிப்பாளரின் அக்கறை தான் படம் நன்றாக வர காரணம்.  ஒளிப்பதிவாளர் ரமேஷ் அதிகம் பேச மாட்டார் இப்படம் விரைவாக முடிக்க காரணம் அவர் தான். இசையமைப்பாளர் தரண், படம் ரசிகர்களிடம் சென்று சேர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. அதுல்யா திறமையான தமிழ் பேசும் நடிகை நன்றாக நடித்திருக்கிறார். இந்தப்படம் முழுதாக உருவாக முழுக்காரணமாக இருந்தவர் சாந்தனு தான். அவரது கேரியரில் இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும்.  இந்தப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறோம் ஒரு காமெடி கலாட்டாவாக உங்களை திருப்தி படுத்தும் படமாக இப்படம் இருக்கும் நன்றி. 

நடிகை அதுல்யா கூறியதாவது...

முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் செய்ய எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார் அவருக்கு நன்றி. இயக்குநர் கதை சொன்னபோதே விழுந்து விழுந்து சிரித்தேன். ஒளிப்பதிவாளர் என்னை மிக அழகாக காட்டியுள்ளார் அவருக்கு நன்றி. நல்ல பாடல்கள் மூலம் படத்தின் வரவேற்புக்கு காரணமாக இருக்கும் இசையமைப்பாளர் தரணுக்கு நன்றி. பாக்யராஜ் சார் ஊர்வசி மேடமும் இணைந்து நடித்தது பெருமை. சாந்தனு மிக ஸ்வீட்டானவர். இப்படத்தில் மிக ஆதரவாக இருந்தார். படத்தில் நடிக்க நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள்  நன்றி. 

தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியதாவது...

எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி. என் வாழ்க்கை 20/20 வனிதா என போய்விடும் என நினைத்தேன் அந்த வீடியோக்களை பார்த்த  இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள். யோகிபாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி, நிறைய யோசித்தேன், ஆனால் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள். இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள், என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானது ஆனால் படம் நன்றாக வந்துள்ளது. ஆர்ட் டைரக்டர் படத்தை நல்லா செய்ததை விட என்னை வைத்து செய்தது தான் அதிகம், ஆனாலும் படத்தை அழகாக கொண்டு வந்துவிட்டார். இயக்குநரின் பார்வையில் திருப்திகரமாக படம் வந்துவிட்டதா என்ற நோக்கில் தான் நான் படம் செய்கிறேன். அந்த வகையில் இந்தப்படம் எங்களுக்கு திருப்தியாக வந்திருக்கிறது. நான் நல்ல படம் எடுத்த புரடியூசர் இல்ல ஆனா நல்ல புரடியூசர். நான் யார் குடியையும் கெடுத்ததில்லை. இந்தப்படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் படம். எல்லோரும் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக பார்க்கலாம். 

இசையமைப்பாளர் தரண் கூறியதாவது..

பாக்யராஜ் சார் என் குரு இந்த மேடையில் நிற்க அவர் தான் காரணம். அவர் ஆபிஸில் நானும் நின்றிருக்கிறேன். ஒரே ஒரு முறை தான் அவரை பார்த்தேன் உடனே வாய்ப்பு கிடைத்தது. அது என் பாக்கியம். ரவீந்திரன் சார் போன் செய்து ஏ ஆர் ரஹ்மான் மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்டார். இப்போது மேடையில் நான் எந்தெந்த பாடல் எல்லாம் காப்பி அடித்து போட்டிருக்கிறேன் என்று சொன்னார் நன்றி. இந்தப்படத்தில் அவர் ஒரு பாடலும் எழுதினார். அவர் பாடலுக்கு செலவு செய்ததிலேயே இரண்டு படங்கள் எடுத்திருக்க முடியும் அவ்வளவு செய்திருக்கிறார். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும்  உழைத்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள் சோனி கம்பெனிக்கும் நன்றி. ஹிட்டாகும் படங்களில் கூட இப்போது பாடல்கள் முன்பை போல் வரவேற்பை பெறுவதில்லை. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் இயக்குநர் பாக்யராஜ் கூறுயதாவது...

நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரை கூப்பிட்டு அவரது கஷ்டங்களை சொல்ல சொன்னால், எல்லோரும் சிரிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்வார்.  அவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறார். தரண் தான் இன்றைய நாயகன் நான் அறிமுகப்படுத்திவர் ஜெயித்திருப்பது மகிழ்ச்சி. மயில்சாமி செய்யும் தர்மம் இங்கே பேசப்பட்டது மகிழ்ச்சி. மிர்ச்சி சிவா தான் டான்ஸில் எனக்கு குரு. அவர் நன்றாக காமெடி செய்கிறார். முருங்கைக்காய் சிப்ஸ் என்றவுடன் முதலில் நான் எடுத்த, அந்த காட்சி ஞாபகம் வருகிறது. முருங்கைகாய் காட்சி முதலில் பலமுறை எடுக்க நினைத்து, காட்சி சரியாக மனதில் வராமல் மூன்று முறைக்கு மேல் எடுத்தேன். இப்போது புகழ் பெற்றிருப்பது சந்தோஷம். சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி. சாந்தனு நல்ல நண்பர்களை பெற்றிருப்பது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சி. நாயகி கோயம்புத்தூர் என்பதே முதலில் தெரியாது அவர் ஆங்கிலத்தில் பேச போகிறார் என தவிர்த்துவிட்டேன் பின்னர் தெரிந்த பிறகு தமிழ் பேசும் பெண் இத்தனை ஜெயித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் நிறைய பாஸிட்வ் எனர்ஜி இருக்கிறது. அதற்காக கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.

முடக்கறுத்தான் திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா... 


தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து -இயக்கம் - K .வீரபாபு
தயாரிப்பு - வயல் மூவிஸ்
இணை இயக்குனர் - மகேஷ் பெரியசாமி
ஒளிப்பதிவு -அருள் செல்வன்
இசை -சிற்பி
தயாரிப்பு நிர்வாகம் - வேதா ரவி , ECR அன்பு
பாடல்கள் -பழனி பாரதி
படத்தொகுப்பு -ஆகாஷ்
சண்டை பயிற்சி -சூப்பர் சுப்பராயன்
கலை இயக்கம் - பிரபஞ்சன்
விளம்பர வடிவமைப்பு - ப்லெஸ்சன்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்


இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .படத்தொகுப்பினை ஆகாஷும் , சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும் மேற்கொள்கிறார்கள் . கதை நாயகியாக மஹானா நடிக்கிறார் .


இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .



நடிகர் & இயக்குனர் வீரபாபு பேசியவை:

சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன் .தற்போது அது நிஜமாகி உள்ளது .குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள்  பற்றிய கதைதான் முடக்கறுத்தான். நிறைய குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான முழுக்க முழுக்க ஒரு அமைப்பு, திட்டம்  உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது .அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த படத்தை ஒரு பார்வையாளனாக பார்த்து சொல்கிறேன் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியவை:

இந்த கொரோனா காலத்தில் எங்கு திரும்பினாலும் உயிரிழப்பு பற்றிய செய்திகள் வந்த சமயத்தில் உயிர்களை காப்பற்றிய மருத்துவர்  என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன் . ஒருநாள் வீரபாபு சந்திப்பின்போது கதையை பற்றி அவர் சொன்னார். இந்த காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு முக்கியமான கதை .அருமையாக வந்துள்ளது. குறிப்பாக சித்ரா பாடிய பாடல் ஒன்று சிறப்பாக வந்துள்ளது. பொதுவாக நடிப்பது சுலபம், பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நடிப்பது சிரமம். ஆனால் அதையும் சிறப்பாக வீரபாபு செய்துள்ளார் .கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.



நடிகர் மயில்சாமி பேசியவை:

இந்த படத்தில் நான் ஒரு குடிகாரன் கதாபாத்திரத்தை ஏற்று  நடித்துள்ளேன். ஒரு குடிகாரனை எப்படி திருத்துவது என்ற ஒரு நுணுக்கமான முறையை சொல்லியுள்ளார் வீரபாபு.

தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி பேசியவை:

நானும் வீரபாபுவும் 20 வருட நண்பர்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் பல மக்களின் உயிரை காப்பாற்றிய வீரபாபு இந்த படத்தை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனால் எனது வயல் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்து இருக்கிறேன். இப்படத்தில் என்னையும் நடிக்க வைத்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் .

பாடலாசிரியர் பழனி பாரதி பேசியவை:

இந்த கொரோனா காலகட்டத்தில் பல உயிர்களை காப்பாற்றியவர் வீரபாபு ,மனித நேயம் மிக்கவர். குழந்தை கடத்தல் என்பது இன்று பயங்கரவாதமாக உள்ளது .குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள். அதனை கண்டிக்கும் விதமாக சிறந்த கதையை வீரபாபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் வரும் நான்கு பாடல்களும் பேசப்படும் பாடல்களாக அமையும் என்பது உண்மை. இப்படத்தில் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களை கேட்டால் கண்களில் கசியும்.

இசையமைப்பாளர் சிற்பி பேசியவை:

விநாயகர் சதுர்த்தி அன்று  இந்த  படத்தின் டீசர் வெளியாவது இறைவனின் ஆசீர்வாதம் என்று தான் சொல்ல வேண்டும்.12 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளேன் இந்த வாய்ப்பினை தந்த இயக்குனர் வீரபாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரபாபு அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் மனித நேயம் உள்ளவர். வீரபாபு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து இயக்கியுள்ளார். படத்தின் பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.


நடிகை  மஹானா கூறியவை:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தில் நான் ஒரு குறும்புக்கார கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளது. வீரபாபு சிங்கிள் டேக்கில் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.

VIDEO HERE:

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.