மார்ச் 2025

பெண்களிடம் அத்துமீறிய மதபோதகர்! நெல்லை கோர்ட் அதிரடி தீர்ப்பு




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், கருப்பூரில் வசித்து வருபவர் ஜோசுவா இம்மானுவேல் (47). கோவில்பட்டி பசுவந்தனை சாலை, பாண்டவர்மங்கலம் பகுதியை பூர்விகமாக கொண்டவர். கிறிஸ்தவ மத போதகரான இவர்ம் ஜெபம் செய்து பில்லி, சூனியம் அகற்றுவதாக கூறி பெண்களை தனியாக அழைத்து சென்று நகைகளை பறித்துக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், படித்து முடித்த பட்டதாரி பெண்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி நகைகளையும் பறித்து விடுவதாகவும் கடந்த 2016-ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்த 24 வயதான பெண், பாப்பான்குளத்தை சேர்ந்த 26 வயதான பி.எட் கல்லூரி மாணவி உள்ளிட்டோர் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதில் தாழையூத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரில், ஜோசுவா இம்மானுவேல் தான் ஒரு மதபோதகர் எனவும், ஜெபம் செய்து பில்லி, சூனியம் அகற்றினால் குடும்பம் விருத்தி அடையும் எனவும் கூறி சேலத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், தன்னை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்துக்கொண்டு 10 சவரன் நகையை பறித்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்தார்.

இதுபோல் பி.எட். கல்லூரி மாணவியும் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னை நிர்வாணப்படுத்தி, 6 பவுன் நகையை பறித்து மிரட்டியதாவும் புகார் அளித்தார். அதன்பின் ஜோசுவா இம்மானுவேல் உட்பட 4 பேர்தான் தனது சாவுக்குக் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து 2 பெண்களின் புகார்களின் பேரில் தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜோசுவா இம்மானுவேல், அவரது ஓட்டுனரான விருதுநகர், சாத்தூரைச் சேர்ந்த வினோத் குமார் (32) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், தாழையூத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகார் மீதான வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்து, ஜோசுவா இம்மானுவேலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.54 ஆயிரம் அபராதமும், வினோத் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மணிப்பூரில் நிலநடுக்கம்!



மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்கள் அதிக நில அதிர்வு மண்டலத்தில் வருகின்றன.

இதனால் இப்பகுதியில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!




தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை செல்வோரைத் திரட்டி, பாஜக அரசைக் கண்டித்து, 1,170 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ. 4,034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காததை எதிர்த்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ``இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, ரத்த ஓட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு.

உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக்கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?

வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?’’ என்று பதிவிட்டுள்ளார்.

₹1.30 கோடி மதிப்புள்ள திறன் மேம்பாட்டு இயந்திரங்களை ரோட்டரி வழங்கியது!




சென்னை: 

மைலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், 120 ஆண்டுகள் பழமையான ஒரு நிறுவனமாகும், இது ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் 650 மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு பெற்றோர் இல்லை, மேலும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள்.  Rtn.ராம் என். ராமமூர்த்தி இ.ஐ.பி.பி சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குநர், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் மவுண்டின் முன்னாள் தலைவர் மேலும் இந்த இல்லத்தின் முன்னாள் மாணவர் என்பது பெருமையுடன் குறிப்பிடத்தக்கது. ரோட்டரி சிஎஸ்ஆர் மூலம் அவர் இராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லத்திற்கு ரூ.1.30 கோடி மதிப்புள்ள உபகரணங்களை - லேத், வெல்டிங் சிமுலேட்டர்கள், ஸ்மார்ட் போர்ட், சி.என். சி இயந்திரங்கள் மற்றும் நன்கொடையாக வழங்கினார். இது இராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிக்கு பெரிதும் உதவும்.

மார்ச் 26, 2025 அன்று விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராமகிருஷ்ணா மடம் மற்றும் இராமகிருஷ்ணா மிஷனின் சர்வதேசத் தலைவர் திரு.கௌதமானந்தாஜி மகராஜ் இயந்திரங்களைத் திறந்து வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3233 கவர்னர் Rtn.மஹாவீர் போத்ரா, மெட்ராஸ் மவுண்ட் ரோட்டரி கிளப் தலைவர் Rtn.சண்முகம் தனபால், முன்னாள் மாவட்ட கவர்னர் Rtn.ஐ.எஸ்.ஏ.கே. நாசர், ரோட்டரி அறக்கட்டளை மாவட்டத் தலைவர் Rtn.நீலகண்டன் மற்றும் ரோட்டரி மற்றும் இராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் முன்னாள் மாணவர் என்றும், 1977-1985 வரை படித்தவர் என்றும் Rtn.ராம் என். ராமமூர்த்தி தனது உரையில் கூறினார்.நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பத்தைக் கையாள நமது மாணவர்களின் திறனை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். பல்வேறு உற்பத்தி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைக் கண்டறிய ரோட்டரி தொடர்ந்து மாணவர்களுக்கு உதவும் என்று அவர் உறுதியளித்தார்.

1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் இரண்டும் 2025 ஆம் ஆண்டு 120 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் குறிப்பிடுவது தற்செயல் நிகழ்வு. மாணவர் இல்லத்தின் குறிக்கோள் 'ஏழைகளுக்கான அரண்மனை' மற்றும் ரோட்டரியின் குறிக்கோள் 'சுயத்திற்கு மேலே சேவை' என்பது அருமையான யோசனையுடன் உருவாக்கப்பட்டது.

‘தி டோர்’ விமர்சனம் 



JUNE DREAMS STUDIOS சார்பில், நவீன் ராஜன் தயாரித்து, ஜெய் தேவ் எழுதி இயக்கியிருக்கும் படம் தான் ‘தி டோர்’. இதில் பாவனா, ரோஷினி, ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராம், பைரி வினோ, வினோலயா, கபில், ரமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், சிந்தூரி ,சங்கீதா, பாண்டி ரவி, கிரீஸ் , நந்தகுமார், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

கட்டிடக்கலை நிபுணரான பாவனா, வடிவமைக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக பழமையான சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார். இதனால், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன் பணியை பாவனா தொடங்கும் போது, அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. தன் தோழியுடன் தனியாக வீட்டில் வசிக்கிறார். அப்போது உடன் இருந்த தோழி இரவில் சுவற்றில் முட்டி கொள்கிறார். 

இதனால் நெற்றியில் இரத்தம் கசிந்து மயங்குகிறார். பிறகு இருவரையும் அமானுஷ்ய சக்தி பயமுடுத்துகிறது. பாவனா ஏன் இப்படி நடக்கிறது? என தன் நண்பர்களுடன் ஆய்வில் இறங்கும் போது அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து போகிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே கதை....

படம் ஆரம்பித்தவுடன், ஆவி அமானுஷ்யம் என செல்கிறது. அதன் பிறகு மெதுவாக க்ரைம் த்ரில்லராக செல்கிறது. அதன் பிறகு, இரண்டும் கலந்து செல்ல திரைக்கதையில் சுவாரஷ்யம் கூடுகிறது. பாவனா படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றால் போல் நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள். 

படத்தொகுப்பாளர் அதுல் விஜய் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார். இசை ஓகே. திகில், கிரைம் என ஜெய் தேவ் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றுள்ளார். 

பின்னணி இசை மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கூடுதல் கவனம் தேவை.....

மொத்தத்தில் இந்த ‘தி டோர்’ திகில் அலறல்.....

RATING: 3.2/5

 

Apollo Cancer Centres Launched ‘ColFit’



Chennai:

In response to the rise in colorectal cancer (CRC) cases across India, Apollo Cancer Centres (ACC) has launched ColFit, a comprehensive screening program designed to detect and prevent colorectal cancer at an early stage. This initiative aims to improve survival rates, reduce treatment costs, and address the concerning trend of late-stage diagnoses, which currently lead to poor outcomes and higher healthcare burdens. Despite being highly preventable and treatable with early detection, a significant proportion of CRC cases in India are identified at advanced stages, resulting in lower survival rates and increased treatment expenses.

ColFit focuses on expanding CRC screening among both older and younger populations, emphasizing the importance of early detection. While India’s age-standardized rate (ASR) for CRC remains relatively low at 7.2 per 100,000 males and 5.1 per 100,000 females, the absolute number of cases is substantial given the country’s population of over a billion. More alarming is India’s five-year survival rate for CRC, which stands at less than 40%—among the lowest globally. The CONCORD-2 study further highlights a troubling decline in five-year survival rates for rectal cancer in certain Indian registries.

Colorectal cancer often presents with symptoms that should not be overlooked. These include persistent changes in bowel habits (such as chronic diarrhoea or constipation), rectal bleeding or blood in the stool, unexplained weight loss, and ongoing abdominal discomfort or cramps. Key risk factors include a low-fibre diet, sedentary lifestyle, obesity, genetic predispositions, and a family history of CRC. Recognizing these symptoms and risk factors is critical for early detection and prevention.

Apollo Cancer Centres’ ColFit program introduces a groundbreaking approach to CRC detection by incorporating the Faecal Immunochemical Test (FIT), a non-invasive, highly accurate screening tool that identifies hidden blood in stool—a potential early indicator of CRC. FIT requires only a single sample, offers higher sensitivity, and eliminates the need for dietary restrictions, making it a convenient and patient-friendly option.


 

 

The ColFit screening process follows a structured pathway:

1.      Registration and Risk Stratification: Patients are categorized based on risk levels.

o   Average-risk individuals (aged 45+ with no family history) undergo FIT and stool tests.

o   High-risk patients (with a family history, genetic syndromes, or inflammatory bowel disease) are recommended FIT and colonoscopy.

2.      Analysis and Diagnosis: Abnormal results prompt further analysis of stool samples for occult blood or DNA mutations, while colonoscopy findings are reviewed for polyps or tumours.

3.      Follow-Up and Counselling: Negative cases are advised periodic follow-ups (1-10 years), while positive cases receive further evaluation, including biopsies if necessary. Post-screening, patients receive counselling on lifestyle modifications, personalized screening plans, and genetic counselling for high-risk individuals.

This comprehensive approach ensures early detection, timely intervention, and effective prevention, significantly reducing the risk of CRC progression.

Dr. Venkatesh Munikrishnan, Senior Consultant – Colorectal & Robotic Surgeon, Apollo Proton Cancer Centre, stated, “We must shift from reactive care to proactive screening for colorectal cancer. Lifestyle factors such as poor diet, sedentary habits, and obesity are major contributors to rising CRC cases. A high-fiber diet, regular exercise, and proactive screenings can play a pivotal role in prevention. With ColFit, we are making early detection accessible through FIT, a simple, non-invasive test that can significantly reduce complications and improve outcomes.”

Dr. Senthil Kumar Ganapathi, Senior Consultant – Colorectal & Robotic Surgeon, Apollo Proton Cancer Centre, added, “Colorectal cancer is increasingly affecting both young and elderly populations in India, yet survival rates remain alarmingly low due to late-stage diagnoses. While countries with established screening programs have seen improved outcomes, nearly 50% of CRC cases are detected at advanced stages, with an additional 20% presenting with metastases. Early screening and awareness are critical to reversing this trend. At Apollo Cancer Centres, we are committed to advancing early detection through ColFit, precision treatments, and holistic care to improve patient outcomes and reduce the burden of CRC in India.”

Mr. Karan Puri, CEO, Apollo Proton Cancer Centre, highlighted the organization’s mission: “As a leader in advanced cancer care, our goal is not only to treat but also to educate and raise awareness about the preventable nature of colorectal cancer. With cutting-edge treatments and a multidisciplinary approach, we deliver precision care that enhances survival rates and quality of life. Our team works closely with patients to develop personalized treatment plans tailored to their unique needs. Through ColFit, we aim to empower individuals to take control of their health, ensuring early detection and better outcomes. By offering a seamless screening-to-treatment pathway, we are committed to reducing the CRC burden in India.”

 

Colorectal cancer is one of the most preventable and treatable cancers when detected early. Apollo Cancer Centres urges individuals, especially those with a family history of CRC or persistent symptoms, to prioritize regular screenings. Taking proactive steps such as routine FIT tests, timely colonoscopies, and adopting healthier lifestyles can help curb the rising trend of colorectal cancer and save countless lives.

#WinningOverCancer

 

About Apollo Cancer Centre  https://apollocancercentres.com/

THE CANCER CARE LEGACY: BREATHING HOPE INTO LIVES FOR OVER 30 YEARS

 

Cancer care today means 360-degree comprehensive care, which requires commitment, expertise, and an indomitable spirit from cancer specialists.

 

Apollo Cancer Centre has a network spread across India with over 390 oncologists to oversee the delivery of high-end precision Oncology Therapy. Our oncologists deliver world-class cancer care following an organ-based practice under competent Cancer Management Teams. This helps us in delivering exemplary treatment to the patient in an environment that has consistently delivered an international standard of clinical outcomes.

 

Today, people from 147 countries come to India for cancer treatment at Apollo Cancer Centres. With the first Pencil Beam Proton Therapy Centre in South Asia & Middle East, Apollo Cancer Centre, has all that is needed to strengthen the battle against cancer. All domestic and international patients can contact us through our dedicated patient Helpline number: 04048964515. We are available 24x7.  

அஸ்திரம் திரைவிமர்சனம் 



பெஸ்ட் மூவீஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிக்க, ஷாம், நிரா, அறிமுக நடிகர் ரஞ்சித், வெண்பா, நிழல்கள் ரவி,  அருள் சங்கர், ஜீவா ரவி, மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் ‘அஸ்திரம்’ 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

ஜப்பானிய அரசர் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடித் தோற்றவர்களை, தங்களைத் தாங்களே வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய வைத்த கதை ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது. கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் ஷாம். அவரது மனைவி நிரா ஒரு பத்திரிகையாளர். ஷாம் ஒரு செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க போகும்போது, யாரோ ஒருவர் தோள்பட்டையில் சுட அதனால் ஓய்வு எடுத்து வருகிறார் ஷாம். இந்நிலையில் மூன்று பேர் வெவ்வேறு ஊர்களில் வயிற்றை கிழித்துக்கொண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்கின்றனர். 

இதை விசாரிக்க கான்ஸ்டபிள் சுமந்த்துடன் களத்தில் இறங்குகிறார் ஷாம். விசாரணை குழப்பமாக சென்றுக்கொண்டிருக்க ஒரு நாள் ஷாமின் பழைய நண்பர் விஜய் இவர் வீட்டிற்கு வந்து ஷயாமுக்கு மட்டுமே தெரிந்த வழக்கின் விசாரணைகளை மனப்பாடமாக சொல்கிறார். இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும் என்று கேட்க, அவர் கண் முன்னிலையில் அந்த பழைய நண்பரும் தன் வயிற்றை கிழித்துக்கொண்டு உயிரிழக்கிறார். 

அவர் சாகும் போது மார்டின் என்ற நபர் பற்றி சொல்லுகிறார். யார் அந்த மார்டின்? தற்கொலையின் பின்னணி என்ன? என்பதே மீதி கதை… 

ஷாம் தனது எதார்த்தமான நடிப்பில் சிறப்பாக விசாரணை செய்கிறார். அறிமுக நடிகர் ரஞ்சித் இயல்பாக நடித்திருக்கிறார். கதை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது. மன்னர் காலத்து கதை, வசிய முறை குறித்து படம் பேசுகிறது. பின்னணி இசை விறுவிறுப்பை தூண்டுகிறது. வில்லனாக வரும் விதேஷ் யாதவ் அனைவரையும் பயமுறுத்துகிறார். கான்ஸ்டேபிள் கேரக்டரில் வரும் சுமந்த் சரியான தேர்வு.

கதை புரியாத புதிராக இருக்கிறது..... படத்தின் நீளத்தை குறைத்து இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்..... 

மொத்தத்தில் இந்த 'அஸ்திரம்' வீரியம் குறைவு. 

RATING: 3/5

 

ட்ராமா திரைவிமர்சனம் 


இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில்  விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ட்ராமா. ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மார்ச் 21ஆம் தேதி இந்த படம் வெளியானது. 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

திருமணம் ஆகி பல வருடங்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் சுந்தர் (விவேக் பிரசன்னா) மற்றும் கீதா (சாந்தினி). சில மருத்துவ சிகிக்சைக்கு பின் கீதா கர்ப்பமாகிறார். ஒரு நாள் ஒரு மர்ம மனிதன் கீதாவுக்கு போன் செய்து ஐம்பது லட்சத்துடன் நான் சொல்லும் இடத்திற்கு வா என்று பிளாக்மெயில் செய்கிறான். இரண்டு கார் திருடர்கள் காரை திருடி கொண்டு போகும் போது போலீஸ் மடக்கி பிடிக்கிறது. கார் டிக்கிகுள் ஒரு சடலம் இருப்பதை பார்க்கிறது போலீஸ். இது ஒருபுறம் இருக்க பூர்ணிமா ரவி, பார்த்தோஷ் இருவரும் காதலிக்கிறார்கள். காதலனை பற்றி அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றை தெரிந்து கொள்கிறார் பூர்ணிமா ரவி. அது என்ன? இறந்தவரின் பின்னணி என்ன என்பதே மீதி கதை....

குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் ஏற்படும் சிக்கல்களை புரிய வைக்க முயற்சி செய்துள்ளார் அறிமுக டைரக்டர் தம்பிதுரை மாரியப்பன். குழந்தைக்கு ஏங்கும் ஒரு பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார் சாந்தினி. "இந்த உலகத்தில் யாருமே வலியை வேண்டாம் தான் சொல்லுவாங்க. ஆனால் வேணும்ன்னு நினைக்கிற ஒரே வலி தாய்மை தரும் வலியை மட்டும்தான்" என்று சாந்தினி சொல்லும் போது அரங்கமே உருகுகிறது. 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பு மூலம் பல உணர்வுகளை கொட்டி தீர்த்திருக்கிறார். மனைவியின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்பது தெரிந்தாலும், அதை மனைவியிடம் இருந்து மறைப்பது, அதனால் மனைவிக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு ஆகியவற்றை எண்ணி வருந்துவது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார். 

விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ் நடிப்பிலும் குறையில்லை. மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த விசயத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.

பாடல்களில் கூடுதல் கவனம் தேவை....

மொத்தத்தில் இந்த ‘ட்ராமா’ சிறந்த குழந்தையின்மை விழிப்புணர்வு.

RATING: 3.5/5

 

ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்!



ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே  கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில்  சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு  வாசித்தார் .

2012ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார் .இதை தொடர்ந்து இவர் இசையமைத்த  மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும் ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது  . இப்படங்களை தொடர்ந்து ஆள், உரு, அகடு, ஆயிரம் பொற்காசுகள் ,ஒயிட் ரோஸ் , கன்னட படமான கப்பட்டி போன்ற படங்களும் தற்போது வெளியான ராபர் படம் தொடர்ந்து தனது சிறந்த இசை வேலைப்பாடுகளை கொடுத்து வருகிறார். ராபர் படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த மக்களிடையே   கவனத்தை ஈர்த்து, பெரிதளவில் பேசப்படுகிறது. மேலும் பல படங்களில் தற்போது இவர் பிசியாக வேலைபார்த்து வருகிறார் .


RAJASTHANI ASSOCIATION TAMILNADU HONORS CHANGEMAKERS AT THE RAJASTHANI-TAMIL SEVA AWARDS 2025



Chennai:

The Rajasthani Association Tamilnadu on behalf of the Rajasthani community in Tamil Nadu and Puducherry, proudly hosted the first-ever Rajasthani-Tamil Seva Awards 2025, honoring individuals and institutions who have made an exceptional contribution to the good of the people of 2 states.

The event, held at D.G. Vaishnav College, Chennai, today witnessed the presence of distinguished dignitaries, social leaders, and changemakers from diverse fields. Hon’ble Mr Justice K. R. Shriram, Chief Justice of the Madras High Court graced the function as the chief guest and presented the awards. CA Shri S. Gurumurthy, Editor, the Tamil weekly Tughlaq & the head of jury for the award, unveiled the first ever services directory of the community, Rajasthanis in Tamilnadu: 100 years of Legacy.

🏆 WINNERS OF THE RAJASTHANI-TAMIL SEVA AWARDS 2025

1. Dr. Irai Anbu, Former Chief Secretary, Government of Tamilnadu, was awarded in the category of Public Service, a man whose wisdom, leadership, and service have left an indelible mark on governance, education, and literature in India. Ranked 15th in the All India Civil Services Examination (1988), he rose to become Tamil Nadu’s Chief Secretary, driving landmark reforms in administration, environment, and tourism. He has led key institutions, shaping policies that foster sustainable growth and economic progress. A mentor and guide, he has trained 100+ IAS officers, shaped 50+ Ph.D. scholars, and counseled students across 50+ institutions. His 2,000+ speeches, 1,500+ TV appearances, and 1,000+ radio talks have ignited minds across the nation. A prolific author of 179 books, his work on Thirukkural and Puranaanooru has earned global recognition, bridging ancient wisdom with modern leadership.

For his extraordinary contributions, the jury chosen to honor a mentor, a leader, a scholar, a visionary and an inspiration— Dr. Irai Anbu

2. Shri. C.D. Sanath Kumar was chosen in the field of education. Founder, Cambridge / Indus Valley Senior Secondary Schools, a visionary whose work has touched lives, built communities, and shaped the future through education, healthcare, and rural development. For over 35 years, Shri C. D. Sanath Kumar has been a force for change, founding Sanathkumar Foundation, Cambridge Public e-School (CBSE), Anandamayee Gated Community for Senior Citizens, Anandam Spine & Joint Clinic, and the Rural Informative Centre in collaboration with IIT Madras. His impact is deeply felt in Krishnagiri and Kaveripattinam, Tamil Nadu. In education, he has created a system that goes beyond textbooks—blending Indian values with yoga, meditation, sports, and cutting-edge learning from IIT and ISRO scientists. He has brought rocket science to the classroom, igniting young minds with dreams of space.He believes in learning by doing. His organic farming program, inaugurated by Dr. APJ Abdul Kalam, teaches students the value of agriculture—not in theory, but with their hands in the soil. His story is so inspiring, it became a National Award-winning biopic, directed by Vasanth Sai (2017). His journey is also captured in Chakkara Yaagam, a biography released last year in Chennai.

 

For his relentless dedication to service, innovation, and nation-building, the jury chose to honor Shri C. D. Sanath Kumar with this prestigious award.

3. Shri M Yoganathan, Tree Man of India, was awarded in the field of Environmental Sustainability. A man whose relentless dedication to environmental conservation has transformed Tamilnadu. For 36 years, he has planted and nurtured 35 lakhs saplings, turning barren lands into green havens and inspiring thousands to take up the cause. His journey began as a bus conductor in Coimbatore, where he started distributing free saplings to passengers, proving that small actions can lead to great change. With a personal investment of over ₹30 lakhs, he has dedicated his life to protecting our environment. His impact has been nationally recognized—Prime Minister Narendra Modi honored him in “Mann Ki Baat” (2021), and he has received awards like “Pasumai Porali,” “Real Hero,” “Green Hero Award,” and “Climate Warrior.” Visionaries like Dr. A.P.J. Abdul Kalam, Mukesh Ambani, and Allu Arjun have applauded his extraordinary efforts. Beyond planting trees, he inspires thousands of students, spreading awareness and igniting a passion for a greener future.

A true guardian of nature, his work is a testament to the power of one person’s commitment to change. The jury chose to celebrate the incredible contributions of Shri M. Yoganathan.

4. Swami Vivekananda Rural Development Society (SVRDS), was awarded in the field of Social Welfare, for Transforming Rural Lives Since 1979. For 45 years, Swami Vivekananda Rural Development Society (SVRDS) has been a pillar of holistic rural development, reaching 1,000 villages across 12 districts of Tamil Nadu. Under the leadership of Shri S. Vedantam Ji, its initiatives in education, healthcare, sanitation, water conservation, and skill development have empowered lakhs of rural families.Evening schools enrich 27,000 children with supplementary and cultural education. Healthcare camps have provided eye screenings, cancer detection, and vaccinations to 20,000 villagers. 3,700+ individual toilets built, ensuring hygiene and dignity for 20,000 people. 100+ ponds desilted, securing water access for 2,50,000 villagers. 1,500+ youth trained, with 80% securing stable jobs in their villages. 700+ women trained in driving, gaining licenses and employment opportunities. For its extraordinary service, SVRDS has been recognized by the Hon’ble Prime Minister and the Governor of Tamil Nadu.

The association honoured Dr R. Krishnan, president of the society, for their unwavering commitment to building a self-reliant, empowered rural India.

Hon’ble Mr Justice K. R. Shriram, Chief Justice of the Madras High Court, mentioned:

"I'm delighted to see the Rajasthani Association's Tamil Seva Awards honoring individuals and institutions for their selfless contributions. Their work embodies the ethos of compassion, empathy, and service that is essential for building a just and equitable society. I'm particularly heartened to see the emphasis on education for children and the young, as it is through education that we can empower future generations to become active citizens and drivers of positive change. These awardees are beacons of hope, inspiring us all to strive towards creating a more compassionate, equitable, and just society."

CA Shri S. Gurumurthy, Editor, the Tamil weekly Tughlaq & the head of jury for the award, expressed:

"It's a moment of great pride to be part of this initiative, honoring individuals and institutions for their selfless contributions. I firmly believe that true leadership is about serving others and creating a positive impact. These awardees embody this spirit, inspiring future generations to take up social responsibility. India's strength lies in its collective consciousness, and it's heartening to see individuals making a tangible difference. Let us celebrate these changemakers, acknowledge the power of community, and strive towards a more compassionate society."

 

Each awardee was welcomed sir traditional Rajasthani safa (turban) & was presented with a trophy, a citation, & ₹2 lakh prize, reinforcing the Rajasthani community’s commitment to recognizing those who drive meaningful change.

From 231 nominations across 25 cities and towns of tamilnadu, a meticulous three-stage selection process identified four outstanding individuals whose service has left a lasting impact.

A six-member jury, chaired by CA Shri S. Gurumurthy, carefully reviewed each nomination. Jury members included:

✔️ Shri N. Ravi – Former Editor-in-Chief, The Hindu

✔️ Padma Vibhushan Smt. Padma Subramaniam – Renowned Bharatanatyam Dancer

✔️ Shri N. Sugalchand Jain – Industrialist & Philanthropist

✔️ Prof. P. Balagurusamy – Eminent Academician & Former Vice-Chancellor

✔️ Praveen Tatia – Ex-officio, President, Rajasthani Association Tamilnadu & Member, Minority Commission, Govt. of Tamil Nadu

The winners exemplify excellence in education, environmental sustainability, public service, and social welfare, representing the highest standards of community impact.

🔹 A MILESTONE PUBLICATION: ‘RAJASTHANIS IN TAMIL NADU – 100 YEARS OF LEGACY’

A highlight of the event was the launch of a landmark publication, ‘Rajasthanis in Tamil Nadu: 100 Years of Legacy’, chronicling a century of philanthropy, and social contributions by Rajasthanis in Tamil Nadu. The book was formally unveiled by CA Shri S. Gurumurthy, serving as a testament to the deep-rooted values of service and care that define the Rajasthani community.

🔹 A VISION FOR THE FUTURE

Mr. Praveen Kumar Tatia, President of the Association, emphasized:

“These awards reflect our vision to celebrate those making a real difference, fostering stronger bonds between communities for a shared future of growth and prosperity.”

Mr. Narendra Srisrimal, Chairman of the Rajasthani-Tamil Seva Awards, added:

“We are proud to honor these changemakers. Their stories will inspire future generations to take up the mantle of social responsibility.”

CA Anil Khicha, Convenor, Rajasthani-Tamil Seva Awards, expressed:

“The overwhelming response from the 231 nominees has proved the relevance of the initiative. We are honored to have sparked a ‘positive virus of goodness’ that will spread far and wide across both states.”

The Rajasthani-Tamil Seva Awards will be an annual event, establishing itself as a prestigious platform to recognize, encourage, and celebrate exceptional contributions to society.

CA Shri S Gurumurthy appreciated the associations working backward from the launch function on December 21, 2024 & successfully carrying out the award process as committed. The initiative will go a long way in expanding the care & concern for the people in TamilNadu, he expressed.

The chief guest of the function honourable Mr justice K R Shriram, chief justice of madras high court, lauded the initiative by the Rajasthani community & expressed that it will go a long way to build social institutions & the spirit of care / concern in TamilNadu & Puducherry.

The general secretary Shri Hemant Dugar thanked each & everyone who was instrumental in making the function meaningful & a success.

About Rajasthani Association Tamilnadu: http://www.rajasthaniassntn.in/

Founded in 1967 under the visionary leadership of Shri G.P. Shah and inaugurated by the late Shri C.N. Annadurai, the then Chief Minister of Tamilnadu, the Rajasthani Association Tamilnadu has been at the forefront of social service, cultural promotion, and community welfare. Over the decades, the Association has impacted thousands of lives through initiatives such as scholarship programs—distributing over a crore to deserving students across Tamilnadu—and healthcare services including medical camps and cancer screenings benefiting more than 10,000 individuals. The Mohinidevi Hirachand Nahar Rajasthani Dharmasala provides free food and shelter to over 200 cancer patients daily, highlighting the Association’s unwavering commitment to supporting those in need.

Through cultural events such as Rajasthani Melas and exhibitions, the Association continues to promote the rich heritage of the Rajasthani community while fostering unity and inclusivity in Tamilnadu.

வருணன் விமர்சனம் 



சென்னை ராயபுரம் பகுதியில், ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் இணைந்து தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகின்றனர். ராதாரவியின் தொழிலில், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் வேலை செய்து வருகிறார். 

மறுபுறம், சரண்ராஜின் மனைவி மகேஸ்வரி மற்றும் அவரது சகோதரர் சங்கர் நாக்விஜயன், தண்ணீர் கேன் வியாபாரத்துடன் இணைந்து சுண்டகஞ்சி வியாபாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க மதுவிலக்கு போலீஸ் அதிகாரியான ஜீவா ரவி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.  இந்நிலையில், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேபிரில்லாவை காதலிக்கிறார். ஆனால், தொடர்ந்து இரு குழுக்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. இறுதியில் இந்த பகை என்ன ஆனது? என்பதே கதை... 

“நீரின்றி அமையாது உலகு” என்பது படத்தின் மையக்கருத்தாக உள்ளது. ஆனால், இயக்குநர் ஜெயவேல் முருகன் இதை கேங்ஸ்டர் படமாக உருவாக்கியுள்ளார். பஞ்சபூதங்களில் ஒன்றாகிய தண்ணீர், இயற்கையின் அருமையான கொடையாகும். ஆனால், அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பவர்களின் சூழ்ச்சிகளை இயக்குநர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். 

கதைக் களத்துக்கும் ஒளிப்பதிவுக்கும் வலிமை சேர்க்கும்விதமாக போபோ சசியின் பாடல்களும் பின்னணி இசையும் நம்மைப் படத்துடன் ஒன்ற வைப்பதில் வெற்றிபெறுகிறது. ஆண்டவராக வரும் ராதாரவி வழக்கம் போல் வில்லத்தனமான மற்றும் குணச்சித்திரமான நடிப்பை மிக்ஸ் செய்து சிறப்பாக நடித்திருக்கிறார். திக்குவாயாக நடித்திருக்கும் சரண்ராஜ் செய்வதறியாது தவிக்கும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். 

இவருக்கு ஜோடியாக வரும் பிக் பாஸ் மகேஸ்வரியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகேஸ்வரி தம்பியாக நடித்திருக்கும் வில்லன் சங்கர்நாத் மகேஷ் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். அதேபோல் நாயகன் துஷ்யந்த் நண்பராக வரும் நடிகரும் சிறப்பாக நடித்து கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார். 

கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.... எடிட்டிங் பணியில் கூடுதல் கவனம் தேவை... 

மொத்தத்தில் இந்த 'வருணன்' தண்ணீர் வியாபாரி....

RATING: 2.9/5




'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு



டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார்.  மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.  

வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி, இயக்குநர் கே . பாக்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி , இயக்குநர்கள் ராகவ் மிர்தாத், வெற்றி, நடிகர் லிங்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் பேசுகையில், ''வாய்ப்புகள் தேடி பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்காததால் என்னுடைய நண்பர்களின் ஆதரவுடன் இப்படத்தின் பணியை தொடங்கினேன். அவர்கள் தங்களது பெயரை வெளிப்படுத்த கூடாது என்று கட்டளையிட்டதால்.. தயாரிப்பாளராக என்னுடைய மனைவியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை பைலட் மூவியாகத் தான் முதலில் தொடங்கினோம். அது சிறப்பாக வந்தவுடன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது,'' என்றார்.

இசையப்பாளர் ராஜ் பிரதாப் பேசுகையில், ''இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் தம்பிதுரை மாரியப்பனுடன் இணைந்து பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அவரிடம் பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான்.  குறும்படங்கள் இயக்கும் காலகட்டத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். குறும்படத்தை கூட தரமாக உருவாக்க வேண்டும் என விரும்புவார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை என்றாலும்.. தரமான படைப்புகளை தான் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இது என்னை மிகவும் கவர்ந்தது. தினமும் மாலை ஏழு மணி அளவில் தான் படத்திற்கான பணிகளை தொடங்குவார். அவருக்காக அனைவரும் இந்த நேரத்தில் இணைந்து பணியாற்றினோம். ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனுக்கும் இது முதல் படம் தான். சிறப்பாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. இரண்டு பாடல்கள் படத்தில் இடம்பெறும். ஏனைய இரண்டு படத்திற்கான ப்ரோமோ பாடல்கள். இந்த பாடலுக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு வியாபாரத்திற்காக நிறுவனங்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் யார் நடிகர் என்பதைத்தான் முதலில் கேட்டார்கள். பின்னர் இந்தப் படத்தை பற்றிய கண்டன்ட்டை நாங்கள் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம், தொடர்ந்து வீடியோவாக வெளியிட்டோம். அதன் பிறகு தான் இப்படத்திற்கான வணிகம் தொடங்கியது. அதன் பிறகு ஆல்ஃபா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இளமாறன் எங்களுடன் இணைந்தார். அவர் இப்படத்தை 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியிடுகிறார். 'ட்ராமா' திரைப்படம் ஒரு ஆந்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர் லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசுகையில், ''சின்ன படங்களுக்கு ஊடகங்கள் தான் முதலில் ஆதரவு அளிக்கும். இந்தத் திரைப்படத்தை என்னுடைய நண்பர் இளமாறன் விநியோகம் செய்கிறார். சினிமா மீது நேசம் கொண்டவர். அவர் மேலும் தொடர்ந்து திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க்கையில் எந்த துறையாக இருந்தாலும் முதல்முறையாக பணியாற்றும் போது அந்த அனுபவம் 'ட்ராமா'வாகத்தான் இருக்கும். அதிலும் சினிமாவில் இத்தகைய அனுபவம் அதிகமாக கிடைக்கும். இந்த ட்ராமாவை கண்டு அச்சப்படாமல் தொடர்ந்து பயணித்தால், அந்த ட்ராமா அனுபவம் நிச்சயம் வெற்றியாக மாறும்.  இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று இதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.

நடிகை சாந்தினி தமிழரசன் பேசுகையில், ''இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னை திரையுலகில் அறிமுகம் செய்த குரு கே. பாக்யராஜ் இங்கு வருகை தந்திருக்கிறார். நான் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். அதற்காக இந்த தருணத்திலும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வரை நான் படப்பிடிப்பு தளத்தில் அவர் சொல்லிக் கொடுத்த பயனுள்ள குறிப்புகளை பயன்படுத்தி தான் நடித்து வருகிறேன். தம்பிதுரை மாரியப்பன் திறமையான இயக்குநர். இந்த படத்திற்கான கான்செப்ட் மிகவும் பெருந்தன்மையானதாக இருந்தது.  அவரிடம் கதையைக் கேட்ட பிறகு அவர் ஒரு வீடியோவை காண்பித்தார். அதுவும் சிறப்பாக இருந்தது. எப்போதும் சிரித்த முகமாகவே அவர் இருப்பார். பாசிட்டிவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் செய்து வரும் வேலையையும் விடாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட் என்பதால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மார்ச் 21ம் தேதியன்று அனைவரும் தியேட்டருக்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தாருங்கள். சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும். விவேக் பிரசன்னா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது,'' என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், ''இந்த திரைப்படம் நிறைய கலைஞர்களுக்கு முதல் படம். அவர்களுக்கு இந்த மேடை முக்கியமானது. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இயக்குநர் தம்பிதுரைக்கு சினிமா மீது இருக்கும் தீவிரமான காதலால் அவர் வேலைக்கு சென்று கொண்டே இப்படத்தின் அனைத்து பணிகளையும் செய்தார். அவருக்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் . அவர் தன்னுடைய சக்திக்கு மீறி உழைப்பை கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து வரும் இளமாறனுக்கு நன்றி. கடந்த 20 நாட்களாக இப்படத்தினை மக்களிடம் சேர்ப்பதற்காக தொடர்ந்து விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தம்பிதுரை போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். அவர் இன்னும் உயரங்களை தொட வேண்டும். அதற்கு இந்த ட்ராமா படத்தின் வெற்றி அவசியம் . இதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

விநியோகஸ்தர் இளமாறன் பேசுகையில், ''இது எனக்கு முதல் மேடை.  இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. பதினாறு ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். இதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். இந்த நிறுவனத்தின் சார்பில் முதல் முதலாக 'ட்ராமா' படத்தை வெளியிடுகிறேன். முதல் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் 'ட்ராமா' படத்தை பார்த்தேன். இப்படத்தின் பாடல்கள் தான் என்னை முதலில் கவர்ந்தன. பாடல்களைப் போல் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. மக்கள் மத்தியில் இப்படத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில், ''இது எனக்கு வித்தியாசமான மேடை. இயக்குநர் தம்பிதுரை ஒரே சமயத்தில் இரண்டு வேலை அல்ல, பத்துக்கும் மேற்பட்ட வேலைகளை பார்த்திருக்கிறார். 24 மணி நேரமும் சினிமாவுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உளவியல் ரீதியாகவும் அவர் தயாராகி இருக்க வேண்டும். இல்லை எனில் இது சாத்தியமாகி இருக்காது. இது ட்ராமாடிக்காக யாருக்கு இருந்திருக்கும் என்றால், இயக்குநர் தம்பி துரைக்கு தான் ட்ராமாடிக்காக இருந்திருக்கும். இந்தப் படத்தை எடுப்பதில் அவருக்கு ட்ராமா இருந்திருக்கும்.  நான் வழக்கறிஞர் என்ற முறையில் தினந்தோறும் ட்ராமாக்களை எதிர்கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அரசியல்வாதி என்ற முறையில் நிறைய மக்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அவர்களுடைய ட்ராமாவை தீர்த்து வைப்பதற்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன். அதனால் ட்ராமா என்பது நான் தினந்தோறும் சந்திக்கும் விஷயம்தான். நான் மட்டுமல்ல இங்கு இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு நாளும் ட்ராமாவை எதிர்கொள்கிறீர்கள். அது உங்களுக்கே தெரியாமல் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. ட்ராமாவில் இருந்து விடுதலையானால் சந்தோஷம் தான். நாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தை தான் இந்தப் படம் பேசுகிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நிச்சயமாக நன்றாக இருக்கும் என நம்புகிறேன். இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். ஒரு பாடல் கூட சோடை போகாது. இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை பாடலாசிரியர் மகேஷ் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார், அவர் என் உறவினர் தான். தற்போது இல்லை, இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் என விரும்பி இருந்தார். இந்தப் படத்தின் தொடக்க கட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவர் எழுதிய இரண்டு பாடல்களும் ஹிட் ஆகும் என்பது என் நம்பிக்கை. பாடல்கள் மட்டுமல்ல படமும் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்,'' என்றார்.

நடிகர் ராதாரவி பேசுகையில், ''எனக்கும் இந்த திரைப்படத்திற்கும் சம்பந்தமில்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் இயக்குநர் தம்பிதுரை. அவர் இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தாருங்கள் என அழைப்பு விடுத்தார். நான் இங்கு வருகை தராமல் இருந்திருந்தால் ஒரு நல்ல விஷயத்தை தவறவிட்டிருப்பேன்.  நம் மக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது படத்தை திரையரங்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் மூலமாக படத்தைப் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். நான் ஒன்றைத் தான் சொல்ல விரும்புகிறேன். இது தமிழர்களின் படம். தமிழர்களாகிய நீங்கள் தான் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நடிகர்களுக்கு அடையாளம் என்பது முக்கியம். தற்போது கூட என் தந்தையார் எம் ஆர் ராதாவை பற்றி பல விஷ லயங்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரியோ தவறோ பேசுகிறார்கள். நமக்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கொடுப்போம். சினிமாக்காரர்கள் யாரும் தரக்குறைவானவர்கள் அல்ல. இயக்குநரை பற்றி மற்றவர்கள் அனைவரும் பேசும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகி 51 வருடங்கள் ஆகின்றன. நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு, என் சகோதரர் கமல் ஹாசனை போல் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எனக்கு ஏகப்பட்ட 'வெளி' வேலைகள் இருக்கின்றன. இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருக்கிறது. இங்கு படத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூட்டர் கூட அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இனி சிறந்த எதிர்காலம் உண்டு. இந்தப் படத்தின் பெயர் 'ட்ராமா'. ஆனால் இந்தப் படத்தை பார்ப்பவர்களை ட்ராமாவில் விடாது. தற்போது சினிமா எடுப்பதும் எளிது, சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம். பொதுவாக படத்தை வெளியிடுவது தான் எளிதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதுதான் கடினமானதாக இருக்கிறது. தற்போது படத்தை வெளியிடுவதற்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. முன்பெல்லாம் 25வது நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள்  என்று படம் வெற்றி பெறும். ஆனால் தற்போது படம் வெளியாகி மூன்றாவது நாளிலேயே 'வெற்றிகரமான மூன்றாவது நாள் ' என போஸ்டர் வெளியிடப்படுகிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடினால் தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. குறைந்தபட்சம் பத்து நாட்களாவது இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்," என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''ட்ராமா படத்தை வெளியிடும் இளமாறனுக்கு என் மனமார்ந்த வா்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய ஆர்டிஸ்ட் யாரும் இல்லாமல் புது முகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை நம்பி வெளியிடும் இளமாறனுக்கு என் நன்றி. இந்த குழுவில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது. இந்த குழுவை எனது மாணவன் பாடலாசிரியர் அருண் பாரதி தான் அறிமுகப்படுத்தி வைத்தார்.  எதிர்காலத்தில் பிரகாசமாக ஜொலிக்கவிருக்கும் குழுவினரை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் டிரைலரையும் , பாடல்களையும் பார்க்கும் போது இந்த குழுவினர் நிச்சயம் பிரகாசமாக வருவார்கள் என்ற நம்பிக்கை என் மனதுள் ஏற்பட்டது. ‌ இங்கு வருகை தந்த உடன் சாந்தினியிடம் 'பெயின் நெவர் எண்ட்ஸ்' என்ற வாசகம் இருக்கிறதே, அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு அல்லவா, அதனால் அது தொடர்பாக கேட்டேன். இந்தப் படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள் என தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இயக்குநர் தம்பிதுரைக்கு மேலும் பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு இந்தப் படத்தின் வெற்றி உத்திரவாதமாக இருக்கும் என நான் நம்புகிறேன். ட்ராமா என்றால் என்ன அர்த்தம் எனக் கேட்டேன். இது தொடர்பாக என் உதவியாளரிடம் தமிழில் என்ன என்று கேட்டபோது, அவர் 'பாதிப்பு' என சொன்னார். சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. என்னுடைய உதவியாளர்களிடம் கதை விவாதத்தின் போது கதையை யோசிக்காதே, உன் மனதுக்கு எதை பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதை மனதிற்குள் அலசினால் நல்ல கதை கிடைக்கும் என சொல்வேன். எந்த நாட்டிலும் எந்த மக்களிடத்திலும் வரவேற்பை பெறும் ஒரே ஸ்டோரி லவ் ஸ்டோரி தான். இன்றைய இளைஞர்கள் கூட காதலிக்கிறார்களோ இல்லையோ காதலைப் பற்றி ஒரு கவிதையை எழுதி விடுவார்கள். அதனால் முதலில் அறிமுகமாகுபவர்கள் காதல் கதையை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக எழுதி இயக்கி விடுவார்கள். ஆனால் தம்பித்துரை அப்படி அல்ல. இந்த திரைப்படத்தில் மூன்று கதை களங்கள், கதைகள். மற்றவர்களைப் போல் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான சப்ஜெக்ட்டை தேர்வு செய்திருக்கிறார் தம்பிதுரை. இதற்காகவே அவரை பாராட்டலாம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். படம் நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.

 

Wipro’s MyWiproVerse Chennai Transforms Workspaces with Smart Lighting and Ergonomics





Wipro Commercial & Institutional Business (CIB), a pioneer in lighting and seating solutions, has launched MyWiproVerse Chennai, an advanced IoT-powered hub redefining workspace innovation designed to showcase the future of intelligent, sustainable workspaces. Spanning 1100 sq. feet, this hub integrates smart technology, health-first design, and ergonomic solutions, offering businesses an immersive preview of workspaces that enhance productivity, well-being, and sustainability.

Designed for businesses, architects, and workspace designers, it offers a hands-on experience of next-gen smart lighting, automation, and seating solutions. MyWiproVerse Chennai integrates human-centric lighting that aligns with circadian rhythms to boost productivity and well-being, alongside ergonomic seating designed for Indian anthropometrics. Dark Sky-compliant lighting, LiFi technology for high-speed wireless connectivity, and sustainable materials reinforce Wipro’s commitment to energy efficiency and environmental responsibility. 

Speaking on the launch, Anuj Dhir, Senior Vice President & Business Head, Commercial & Institutional Business, Wipro Consumer Care & Lighting, said: 

“Workspaces today are more than just physical spaces. they are enablers of productivity, collaboration, and well-being. MyWiproVerse Chennai is designed to help businesses reimagine their environments with smart, sustainable, and human-centric solutions that drive efficiency and innovation." The centre features interactive walkthroughs, expert-led design consultations, and live demonstrations, allowing businesses to visualize and implement smarter workspace solutions. Key highlights include low-glare, high-efficacy lighting, smart automation with wired and wireless integration, and seating solutions crafted from sustainable, VOC-free materials. With a focus on energy efficiency, employee well-being, and ESG goals, MyWiproVerse Chennai sets a new benchmark for workspace innovation. It provides businesses with practical insights to optimize productivity, reduce costs, and align with sustainability standards. Guided tours and workshops will be available at the launch, with ongoing sessions led by Wipro’s design and sales teams. With businesses increasingly prioritizing smart, sustainable workspaces, MyWiproVerse Chennai offers an exclusive opportunity to experience the future of work—today.

VIDEO HERE:

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.